நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

ஹீரோ கதை - சதா சர்வமும் மயக்கிய நடிகர்

ஃபிளாஷ்பேக் ஓட்டிப் பார்க்கையில், பாடுபட்டு நாடக மேடைகளில் தலைகாட்டி, பசியும் பட்டினியுமாக சினிமாக்களில் துக்கடா வேஷத்தில் தலைகாட்டி, பிறகுதான் மெதுவாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜிக்கும் நாடக உலக சோதனைகள் ஆயிரம் இருந்தன. ஆனால், ‘பராசக்தி’ என்கிற ஒரே படத்தின் மூலம் அவர் ஓவர்நைட் ஹீரோ ஆனார்.
செவாலியே ரூட்டில் ஒரே படத்தில் உச்சகட்டப் புகழை அடைந்தவர்தான் இந்த அத்தியாயத்தின் ஹீரோ .சப்பாத்தி மண்ணில் ஸ்மால் ஸ்கிரீன் ஜீவிதம் (ஹிந்தி டி.வி தொடர்கள்) நடத்தியவரை பிக் ஸ்கிரீனுக்குக் கொண்டுவந்து சோபிக்க வைத்தார், மௌன இயக்குநர். முதல் படத்தில் கரை புரண்டபோது நடித்த காலத்தில் நம்மாளுக்கு சென்னையில் தங்கவே இடம் கிடையாது. டைரக்டர் ஆபீஸிலேயே டேரா போட்டார். முதல் படத்திலேயே இவரின் நீளப் புன்னகை பார்த்து மயங்கிய கல்லூரிப் பட்டாம்பூச்சிகள் ஏராளம். இவரது கடைக்கண் பார்வை படுவதற்கே பெருந்தவம் செய்திருக்க வேண்டுமென்று பெருமூச்சுவிட ஆரம்பித்தார்கள்.
கோல்கேட் ஹீரோவுக்கு காவேரிக்கரை ஏரியா தான் பூர்வீகம். முதல் படத்தின் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியில் மிரண்டுபோன இவர், ஏக எதிர் பார்ப்புடன் நடித்த இரண்டாவது படம் ஏனோ எடுபடவில்லை. மூன்றாவதாக ரிலீஸில், மறுபடி காலேஜ் டீன் ஏஜ்களைக் கட்டியிழுக்கும் வெளிச்சத்தோடு தியேட்டருக்கு வரவழைத்துக் கட்டிப் போட்டு விட்டார் மனுஷர். மிஸ்களின் ‘மாஸ்’ என்று இவர் அதிரடி பண்ணியதில் ஏற்கெனவே இங்கிருந்த பல சாக்லெட் ஹீரோக்களுக்கு கிலி பிடித்தது.
வெற்றி வெற்றி என்று இவர் வரிசை கட்டிய அடுத்த படத்திலிருந்துதான் குஜிலிகளிடம் நோகாமல் நொங்கெடுக்கும் கலையைப் பழக ஆரம்பித்தார் இவர். இவரும் இப்படித்தான் என்பது முதன்முதலாக சினிமா கூறும் நல்லுலகத்துக்குத் தெரிய ஆரம்பித்தது, ஒரு போட்டோ செஷனில்தான். பக்திமயமான நட்சத்திரத்தோடு அந்த போட்டோ செஷன். கேமரா, லைட்ஸ் செட்டப் மாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் நடிகை. அருகில் நம்மாளு. அப்படி என்னதான் பேசினாரோ, தனக்கு ஒதுக்கியிருந்த மேக்கப் அறைக்கு பொசுக் என்று போனார் ஹீரோயின். சில நொடிகளில் ஹீரோவையும் காணவில்லை. ஷாட் ரெடியானதும் உதவியாளர் ஓடிப்போய் நடிகையின் மேக்கப் ரூம் கதவைத் தட்டினார். சிறிது நேரத்துக்குப் பிறகே கதவு திறக்கப்பட்டது. சற்று முன்பு மல்லிகைப் பூவாய் மலர்ந்திருந்த விழிகள் சிவந்திருந்தன. காஸ்ட்யூம் கலைந்திருந்தன. விருட்டென்று ஹீரோவும் அந்த அறையிலிருந்து வெளியே பாய, கிறுகிறுத்துப் போனார் உதவி!
உள்நாடு தொடங்கி மேல்நாடு வரைக்கும் அம்மாதிரி புத்தகங்களை வகைவகையாகப் படிப்பாராம் இவர். அதில் வருகிற வாத்ஸ்யாயன டெக்னிக்குகளைப் பயன்படுத்தி வசியம் செய்வதில் அசகாய சூரராம். ”செக்ஸ் முதல்ல மூளையில்தான் தொடங்குது, தெரியுமா? அதற்கான தூண்டுகோல் நாம போடற வார்த்தைகளில்தான் இருக்கு. எந்தப் பெண்ணுக்குமே கிளர்ச்சி முதலில் நம் பேச்சில்தான் ஆரம்பிக்குது!” என்பார் இவர். தனிமையில் பேச ஒரு சில நிமிடங்கள் கிடைத்தால் போதும்… வாய்ஜாலம் காட்டுவார். அடுத்து, சோஷியலாக விளையாடுவதுபோல் கிச்சுக் கிச்சு மூட்டுவது உள்ளிட்ட விரல்விடு தூதுகளை பப்ளிக்காகவே செய்வார். ‘அமுல் பேபி சும்மா விளையாடுது…’ என்றுதான் மேலோட்டமாகத் தோன்றும். அப்புறம் ஜோக் அடிக்கிறேன் பேர்வழி என்று கெட்ட கெட்ட கதைகளாகச் சொல்லி, அதிலேயே ‘எக்ஸ்’ ரேட்டிங்கை ஏகத்துக்கும் ஏற்றி… வெட்கத்தில் முகம் சிவக்கிற நேரம் பார்த்து விருப்பத்தைச் சொல்லி விடுவாராம்.
”எனக்கு ரசிகைங்க கூட்டம் ஜாஸ்தி. அதனால என்னோட எல்லாப் படமுமே சில்வர் ஜூப்ளி!” என்று நெருங்கிய நண்பர்களிடம் புகை மண்டலத்துக்கு நடுவே இவர் உரை யாற்றினார், முதல் சில வருடங்களில். அதன்பின் வரிசையாகப் படங்கள் தலையைத் தொங்கப் போடவும், ‘கதை சரியில்லாட்டி உச்ச நட்சத்திரத்தின் படமே கூட ஊத்திக்கொள்ளும்!’ என்ற பேருண்மையை உணர்ந்தார். ஏகத்துக்கும் ஏற்றி வைத்திருந்த தன் ரேட்டைச் சட்டென்று குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்.
நம்ம ஹீரோ கட்டுப்பெட்டி குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், முதல் படத்திலிருந்து இன்று வரை இவருக்கு நிழலாக இருப்பவர் மூன்றெழுத்துக்காரரான ஒரு பரோட்டா – பாயா பிரியர்தான். அவர் மூலமாகவே தயாரிப்பாளர்களுக்குத் தகவல் அனுப்பினார். ‘தம்பிக்கு புத்தி வந்தாச்சு… கண் கெடுவதற்கு முன்பே சூரிய நமஸ்காரம் பண்ணிட்டாரு!’ என்று சில தயாரிப்பாளர்கள் ஹீரோவைத் தேடிவந்தனர். அதில் ஒரு தயாரிப்பாளர் பல லட்சம் சம்பளம் பேசி, சில லட்சம் அட்வான்ஸ் கொடுக்க வந்தபோது, ”ஐம்பதாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தாலே போதும்!” என்று ஹீரோ சொல்ல… அந்தத் தயாரிப்பாளருக்கு ஆனந்த அதிர்ச்சி!
குஷியாக வீட்டுக்குப் போனவரின் சந்தோஷம் நீடிக்கவில்லை. ஷூட்டிங் தொடங்கியதுமே சனியன் சடுகுடு ஆட ஆரம்பித்தது. முதல் நாள் படப்பிடிப்பில் தானுண்டு தன் வேலையுண்டு என்று சைலன்டாக இருந்த ஹீரோ, தன்னுடைய ஏழரை வேலையைக் காட்ட ஆரம்பித்தார். திடீரென்று, ”டைரக்டரை மாற்று… கேமராமேனை மாற்று… நான் சொல்ற ஆளைப் போடு!” என்றெல்லாம் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார். தடபுடலாக கோடிகள் செலவு செய்யப்பட்டு படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஒரு நாள் படப்பிடிப்பு நடக்கும் இடத்தைத் தயாரிப்பு சொல்ல, தன் மொபைல் ஸ்விட்சை அணைத்துவிட்ட ஹீரோவிடமிருந்து நோ ரெஸ்பான்ஸ்! என்ன ஏது என்று பதறியடித்துக்கொண்டு வீடு தேடி ஓடினார் தயாரிப்பு. ‘மொத்த சம்பளத்தையும் முன்னால் வைத்தால்தான் ஷூட்டிங்குக்கு வருவேன்’ என்று கறாராகச் சொல்லியிருக்கிறார், ஹீரோ. தவித்துப்போனார் தயாரிப்பு. எவ்வளவோ கெஞ்சியும் மசியவில்லை நடிகர். கந்துவட்டிக்கு கரன்சியை வாங்கிக் கொடுத்தார் தயாரிப்பு. பணப்பெட்டியைப் பார்த்த பிறகே கார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தது.
வைஷ்ணவ ஆத்து அழகியோடு (”அய்யங்காரு வீட்டு அழகே”) இவருக்கு சிக்கிமுக்கி உண்டான போதும், ஷூட்டிங் ஸ்பாட் குடைச்சல்கள் ஏகத்துக்கும் எகிறின. படவேலையாக வெளியூர் போவதாக தன் மனைவியிடம் டிமிக்கி கொடுத்துவிட்டு, ‘சதா’சர்வகாலமும் நடிகை வீட்டிலேயே இவர் தஞ்சமாகிக் கிடந்த நாட்களும் உண்டு. எத்தனையோ ஹீரோக்களுக்கு ‘போ’ சொன்ன நடிகை, இவருக்கு மட்டும் ‘வாய்யா வா’ என்று கிறங்கும் குரலில் செல்போன் அழைப்பு விடுப்பாராம் எப்போதும். ஒரு முறை அந்த அழகியை தன் வீட்டுக்கே அழைத்துச் சென்றவர், ”ஜஸ்ட் ஃபிரெண்ட்ஷிப்தான். மத்தபடி எதுவுமில்லை!” என்று சம்மன் வராமலே சாட்சி சொன்னாராம். அப்பாவி நடிப்பைப் பார்த்து நெகிழ்ந்துபோன மனைவி, ”சீச்சீ… எனக்குத் தெரியாதா… நீங்க ரொம்ப வெகுளின்னு!” என்று நட்புச் சான்றிதழ் வழங்கினாராம்.
இது மாதிரியான காலகட்டத்தில் ஒரு முறை ஹீரோ பாத்ரூமில் குளித்துக் கொண்டு இருந்தபோது, அறையிலிருந்த அவரது செல்போன் அலறியது. போனை எடுத்தார் மனைவி. இவர் ஹலோ சொல்வதற்குள் எதிர்முனையில் இருந்த அழகி காமரசம் வழியும் குரலில் கடகடவென அழைப்பு வைத்துத் தொலைக்க, மௌனமாக போனை சாத்திய மனைவி… அடுத்த சில நாட்களிலேயே அந்த அழகி நேரில் தன் வீட்டுக்கு வந்தபோது, வார்த்தைகளால் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாராம்!
”இனிமேல் அந்த நடிகை இருக்கும் திசை பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேன்!” என்று ஹீரோ கொடுத்த வார்த்தை, நீர் மேல் சத்தியம்தான்! இன்று வரை அழகியின் தொடர்பு விட்டகுறை தொட்டகுறை..!
வெளிநாடு ஷூட்டிங் என்றால் ஆனந்தத் தாண்டவமே ஆடுவார் – ஹீரோவல்ல… அவரது திருமதி! கணவரோடு சேர்ந்து ஃபாரின் புறப்பட குடும்பத்துடன் குஷியாக மூட்டை கட்டிவிடுவார். ஒரு பக்கம் கணவர் மீது கண்காணிப்பு… மறுபக்கம், தயாரிப்பாளர் காசிலேயே செமத்தியான ஷாப்பிங் சான்ஸ். ஹீரோவும் திருமதியைத் தடுக்க முடியாமல் தன்னோடு கூட்டிச் செல்வார். ஒரு பக்கம் ஷாப்பிங் நடக்கிறபோது, இங்கே ஹீரோவின் ரியல் விளையாட்டும் சடுதியில் நடந்தேறுமாம்.
ஹீரோ நடித்த சில படங்களுக்கு அவர் அணியும் காஸ்ட்யூம்களை அவர் மனைவியே செலக்ட் செய்வார். ”சென்னையில் காஸ்ட்யூம் எடுக்க மாட்டேன்… வெளி நாட்டில்தான் பர்ச்சேஸ் பண்ணுவேன். அதுக்கு தனியா ஃபிளைட் டிக்கெட் எடுத்துக் கொடுங்கோ!” என்று கறாராகப் பேசி லம்ப்பாக தொகை வாங்கி, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் என்று பறப்பாராம் திருமதி. பாதி ஷாப்பிங் என்னவோ இவருக்கான காஸ்ட்யூமிலேயே கழிந்துவிடுமாம். மீதிதான் கணவருக்கு.
இடையில் சொந்தமாகப் படம் தயாரிக்கிற முயற்சியில் இறங்கி, ஒரு கட்டத்தில் உஷாரானவர், நம்மைக் காப்பாற்றத்தான் யாரோ ஒருவர் இருக்கிறாரே என்று பெரிய நிறுவனம் (பிரமிட் சாய்மீரா) ஒன்றிடம் விலைபேசி விற்றுவிட்டார். ஏற்கெனவே, நஷ்டத்தால் நொந்து நூடுல்ஸ் ஆகியிருந்த நிறுவனத்தின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது ஹீரோவின் பட ரிசல்ட்.
சினிமா வாய்ப்புகளுக்கு பெரிய திரை மெதுவாக விழுவது அவருக்கே நன்றாகத் தெரிகிறது. லேட்டஸ்ட் படத்துக்கு நேர்ந்த கதியும் அதை உணர்த்துகிறது. பெரிய திரை விழுகிறபோது, வாழ்க்கையில் சின்னத் திரை ஒன்றை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தில்தான் இவர் வண்டி இப்போது ஓடுகிறது. பண்டிகை காலத்தில் இவர் படம் ரிலீஸாகிறதோஇல்லையோ… வாழ்க்கையில் விதம் விதமாக விளம்பரம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஆக… சரக்கு குறைந்தாலும், முறுக்கு குறையாமல் பந்தாவா தொடருது அய்யாவின் ஆட்டமும் ஓட்டமும்!
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.