சற்றும் மனம் தளராத மன்னனுக்கு ஈடாக அவரைத்தான் உதாரணம் சொல்வார்கள். இவர் வந்த பாதையில் வேறு யாரும் வந்திருந்தால், ‘பேசாம ஹார்பர்ல போயி மூட்டை தூக்கலாம்பா…’ என்று வெறுத்து ஒதுங்கியிருப்பார்கள்! ”நான் தனியாளா இந்த நிலைக்கு வரலை… என்னைச் சுத்தி இருக்கிற நண்பர்களுக்கு நான் காலமெல்லாம் கடமைப்பட்டிருக்கேன்!” என்று அடிக்கடி கண்கள் கசிவார் மனப்பூர்வமாக.
திரையில் ஒரு பிரமாண்ட இடத்தைப் பிடிப்பதற்கு முன்பாக எதிர்பாராத
விபத்து நேர்ந்தபோது, மடித்துப் போட்ட மளிகைக் கடைப் பொட்டலமாக ஆஸ்பத்திரி
பெட்டில் அசையாமல் கிடந்தார். சத்தியவான் உயிரை சாவித்திரி மீட்டதுபோல்தான்
விடாப்பிடியாகப் போராடி, கணவரைத் தேற்றி வீட்டுக்குக் கொண்டு வந்தார்
இல்லத்தரசி .நிஜமாகவே கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டிய நல்லத்தரசி!சரட்டென்று
அவருடைய வாழ்க்கை ‘கிராஃப்’ தூக்க… நாளரு தோற்றம், பொழுதொரு நடிப்பு என்று
கலை உலகில் மற்றொரு உருப்படியான ஹீரோவாக சிலிர்த்தெழுந்த அவருக்கு, லேட்டாக
வந்தாலும் லேட்டஸ்டாகக் கிளம்பின மற்ற விருப்பங்கள்.
கெக்கேபிக்கே சிரிப்போடு ஜோடி போட்ட கன்னத்துக் குழியழகி விஷயத்தில்தான்
முதலில் அவர் வெயிட்டாக விழுந்ததாகச் சொல்வார்கள். ஸ்வீட் இங்கிலீஷில்
பேசியே சாஃப்டாக தன்வசப் படுத்தியவர், பட வேலை முடிந்தபின் தொடர்பை
அறுத்துக்கொண்டது புத்திசாலித்தனம். பிற்பாடு, அந்த கன்னக் குழியழகியை, தன்
குருவானவரின் கூட்டுக்குள் காதல்மயமாகப் பார்க்க நேர்ந்தபோது, ”எவ்வளவு
புத்திசாலி மனுஷனா இருந்தாலும் காதல் வந்துட்டா கிறுக்காயிடுறாங்கப்பா…
கிளி கடிச்ச கோவைப் பழத்து மேலே என்னமா கிரேஸ் வச்சிருக்காரு..!” என்று
குருவானவர் பற்றி நண்பர்களிடம் சீரியஸாக வருத்தப் பட்டாராம்.
வாழ்க்கையின் இன்னொரு திருப்புமுனையாக அமைந்த அந்தப் படத்து அவுட்டோர்
ஷட்டிங்கின்போது, தான் கடித்த கோவைப் பழத்தோடு டைரக்டர் கொண்ட மையலால்.
மணிக்கணக்கில் ஸ்பாட்டில் இவர் சும்மா காத்துக்கிடக்க நேர்ந்த
கடுப்பையெல்லாம்கூட நண்பர்களிடம் பிறகு கொட்டியிருக்கிறார் இந்த நடிப்பு
மகன்.
சிக்கனமா சாப்பிட்டாலும் சத்தா சாப்பிடணும் என்பார் இவர். ராஜ திராவக
விஷயத்திலும் அதை கட்டுப் பாடாகப் பயன்படுத்துவார். சரக்கில் சோடா கலந்த
பிறகு, அதனுள் வெற்றிலையை நுழைத்துத் தாலாட்டுகிற டெக்னிக், ‘பையன்கள்’
படத்தில் வருமே. உண்மையில் அது இந்த ஹீரோவிடம் காமெடியர் கேட்டுத் தெரிந்து
கொண்டதுதானாம். ”வோட்காவுக்கு லெமன் பிழிஞ்சிட்டு வேறெதுவும் கலக்காம
கல்ப் அடிக்கணும். டகிலாவுக்கு உப்புதான் முக்கியம்.” என்று கிக்காக இவர்
‘கிளாஸ்’ எடுக்கும் அழகேஅழகு!
ஆக்ஷன் ஹீரோவாக இவர் பவுடர் பறக்கவிட்ட படத்தின் போது ஸ்பிரிங்
நடிகையுடன் நெருக்கம் வந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் மூலைக்குஒருத்தராக
உட்கார்ந்து ஷாட் வரும்போது மட்டும் கூடிப் பிரிந் தார்கள். நாலைந்து
நாளிலேயே ரெண்டு நிமிஷ பிரேக்கில்கூட நாலு ஜோக் சொல்லி ஜாதிக்காயை
குலுங்கிச் சிரிக்க வைக்க ஆரம்பித்தார் ஹீரோ. அப்புறம் உணவு இடைவேளைகளில்
இவர்கள் இருவர் மட்டும் யூனிட்டைவிட்டு எட்ட உட்கார்ந்து
பகிர்ந்துகொண்டார்கள். வேடிக்கை சிரிப்போடு ஒருத்தருக்கொருத்தர்
ஊட்டிவிட்டுக் கொண்டதையும் அசிஸ்டென்ட்டுகள் பார்த்தார்களாம்!
அடுத்தொரு படத்திலும் இவர்கள் சேர்ந்து கலக்கும் வரம் கிடைக்க.. செட்டி
நாட்டில் செட் போட்ட இடத்திலும் அன்பு மழை பெருக்கெடுத்ததாம். ஒரு நாள்
செமத்தியாக நிஜ மழையடித்த காரணத்தால் ஷூட்டிங் கேன்சல் ஆகிவிட, அவர்
தங்கியிருந்த அறைக்கு இவர் போய் ‘ஸ்வீட் நத்திங்ஸ்’ பேச ஆரம்பித்தார்.
வெளியே பேய் மழையடிக்க ஆரம்பித்தது. இவர்கள் லஞ்ச்கூட கேட்காமல் அறைக்குள்
அப்படியொரு அரட்டையடித்தார்களாம்.
கேமரா முன்பு நடிகரும் நடிகையும் நிற்கும்போது, சுற்றியிருக்கும் யூனிட்
அவர்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தது. அதைப் புரிந்துகொள்ளும்
மனநிலையில் இருவரும் இல்லை. பிறகு நடிகை நயமாக வேறு திசையில் தன்
வாழ்க்கையை அமைக்கும் திட்டங்களில் இறங்க. அவருடைய நெருங்கிய தோழி
ஒருவரும், ”இனி வேணாம் இந்த நட்பு!” என்று அட்வைஸ் பண்ண. ”வாழ்க்கை வேறு…
நட்பு வேறு!” என்று இவர் வெளிப்பேச்சுக்கு சமாளித்தாலும், உள்ளூர மனசாட்சி
உறுத்த ஆரம்பித்ததாம். அதைத் தொடர்ந்து கொஞ்சும் இங்கிலீஷில்
ஹீரோவிடமிருந்து செல் அழைப்பு வந்தால் எடுக்காமல் கட் பண்ண ஆரம்பித்தார்.
இதில் டென்ஷனாகிப் போன ஹீரோ, விடாப்பிடியாக விரட்டி மெஸ்மரைஸ் பண்ண
ஆரம்பித்தார்.
ஊர் உலகத்தின் பார்வையில் சின்சியரான தனது புதுவாழ்க்கைத் திட்டங்கள்
பற்றி பரவி விட்ட நிலையில், வரப் போகிறவருக்கு உண்மையாக இருக்க நினைத்த
அந்த நடிகைக்கு, அடுத்தடுத்து சத்திய சோதனை. பார்ட்டிகளில் எங்காவது
பார்த்தால் வலிய வந்து ஹீரோ பேசுவதும், வரப்போகிறவர் அதை தூர நின்று
கவனிப்பதுமாக இருதலைக் கொள்ளி எறும்பு நிலையானது நடிகைக்கு.
ஜாதிக்காய் வாசம் பார்க்க வீதிக்கே போன கதையாக, ஸ்பிரிங் நடிக்கும்
படப்பிடிப்புக்கு திடீரென்று ஹீரோ பிரவேசிப்பார். அம்மணி முகம் சுட்ட
கத்தரிக்காயாக மாறுவது பற்றிக் கவலையே படாமல் மேக்கப் ரூமில் தானும்
வம்படியாக உட்கார்ந்துகொள்வார். பின்லேடனில் ஆரம்பித்து புடலங்காய் விலை
வரை இவரே படபடவென்று பல சப்ஜெக்ட் பேசி, ”நீ என்ன நினைக்கிறே?” என்று
கருத்துக் கேட்டுத் தாளிப்பாராம். ‘யூனிட்டில் இருக்கிற யாராவது ஒரு பரட்டை
போன் போட்டு பற்ற வைக்கட்டுமே… வரப்போகிறவருக்கும்தான் நியூஸ் போகட்டுமே’
என்று இவர் வில்லங்கம் பண்ண வந்த மாதிரியே இருக்கும்.
விஷயம் தெரிந்து சம்பந்தப்பட்டவரும் முகம் சிவந்து அங்கே வந்திறங்க.
படுஅப்பாவியாக இவர் அவரைக் கிராஸ் செய்து கொண்டுபோய் காரில் ஏறிப்
பறப்பாராம். கார் கிளம்பும்போது இவர் முகத்திலும் ஒரு விபரீதப் புன்னகை
கிளம்புமோ என்னவோ..!
பெண்ணின் நிலைமை எப்படியிருக்கும்?’அடுத்தவன் மனைவியை ‘DAR’ இந்தி
படத்தில் ஷாரூக்கான் வெறிகொண்டு துரத்துகிற மாதிரி, அடுத்தவர் மேல் லயித்த
பெண்ணைத் துரத்தித் திணறடிப்பதில் இவருக்கென்ன வெறியோ..!’ என்று சினிமா
வட்டார பார்ட்டிகளில் டென்ஷனாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதன் உச்சமாக,
சிங்கப்பூரில் நட்சத்திர இரவு நடந்தபோது வேண்டுமென்றே ஸ்பிரிங் தனக்கு
ஜோடி போட்டு மேடையில் ஆடும்படி விழா நிர்வாகிகள் மூலம் செட் செய்துவிட்டார்
ஹீரோ. அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மட்டுமின்றி, நிகழ்ச்சிக்காகப்
போயிருந்த மற்ற சினிமா புள்ளிகளே அலறுகிற அளவுக்கு மேடையில் அந்த நடிகையை
வில்லாக இவர் வளைத்தெடுக்க… நொந்து நூடுல்ஸ் ஆனாலும் அந்த நடிகை,
ஒளிவெள்ளத்தில் முகச்சுளிப்பைக் காட்ட முடியாமல் நடனத்தில்
ஒத்துழைக்க.அன்றிரவு திரை விழுந்ததும் இருவருக்கும் செமத்தியான மோதல்
என்கிறார்கள்.
அளவோடு அடித்தாலும், அதற்கொரு லாஜிக்கோடு கிளாஸைத் தொடும் நம்மவர்,
அன்றைக்கு மிக்ஸிங்கே இல்லாமல் இஷ்டப்படி ஏற்றிக்கொண்டாராம். ‘நான் என்ன
அப்படி குறைஞ்சு போயிட்டேன்’ என்று தனக்குத்தானே புலம்பியபடி, தன்னுடைய
பர்ஸில் இருந்த எல்லா ஏ.டி.எம். கார்டுகளையும் எடுத்துக்கொண்டு அந்த
நடிகைக்குப் பிடித்த படுகாஸ்ட்லியான கிஃப்ட்டை வாங்க கடைகடையாக அந்த இரவில்
அலைந்தாராம்!
பாவம் பெண்ணரசி… நாடு திரும்பினால், அவருக்குரியவரிடமிருந்து கடும்
கசப்பு கிளம்பி வந்தது. தன்னிலையை கண்ணீரோடு அவர் விளக்கியபோது, ”போனது
போகட்டும். நம்ம கல்யாணத்துக்கு யாருக்கு வேணா இன்வி டேஷன் கொடு… ஆனா,
அந்தாளுக்குக் கூடாது. இனி நம்ம எதிர்லகூட அந்தாள் வரக்கூடாது!” என்று
கண்டிஷன் போட்டார் வருங்காலக் கணவர்.
திருமண தினத்தன்று ஊரே திரண்டு மண்டபத்தில் நிற்க, நம்ம ஹீரோவும் ஒரு
துறுதுறு இளம் நடிகரும் லேட்டஸ்ட்மத்திய அமைச்சருக்கு சொந்தமான ஸ்டார்
ஹோட்டலில் ரூம் போட்டு மதிமயங்கிக் கொண்டிருந்தார்களாம். தன் ஃபிளாஷ்
பேக்குகளையெல்லாம் துறுதுறுவிடம் இவர் சொல்லிச் சொல்லி லிமிட் தாண்ட.
இருவரும் மாறி மாறி நாக்குக் குளற கொட்டித் தள்ளிய கூத்தைப் பார்த்து
சைடிஷ் சப்ளையர்களே சலிக்கும் வரை சிரித்தார்களாம் பிறகு!
அதற்கப்புறம்தான் “சாமி” புண்ணியத்தில் புது கனெக்ஷன் ஆரம்பமானது.
இன்றைக்கும் வீடு வரை உறவு என்று ஆல் போல் அது தழைத்தும் நிற்கிறது.
ஏற்கெனவே கல்யாணம் ஆன இவரைக் கட்டிக்கிட்டு எங்கும் போய்விட முடியாது என்று
தெரிந்தேதான் அமர்க்களமாகப் பழகினார் அந்தப் பொண்ணு (. முதலில் ஒரு
சான்ட்ரோ காரை பரிசாகக் கொடுத்தார் இவர். அடுத்தடுத்து கரை கடந்து பழக்கம்
தொடர்ந்தது. ஒருபோன் கூட பண்ணாமல் பொசுக்கென்று அந்தப் பொண்ணின் வீட்டுக்கே
போய் இறங்குகிற அளவுக்கு நெருக்கமோ நெருக்கமானாராம்.
அப்படிப் போகிறபோதுதான் இவர் விஷயத்திலும் ‘ஆன்ட்டி’ க்ளைமாக்ஸ்
அரங்கேறி யது என்கிறார்கள், விவரமான சினிமா பி.ஆர்.ஓ-க்கள். இன்றைக்கும்
நம்ம ஹீரோ இருக்கிற இடத்தில், ”நான் மலரோடும் கொடியோடும் உறவாட வந்தேன்…”
என்று பி.ஆர்.ஓ. யாராவது மெள்ளப் பாடினால், அது தன்னைத் தான் என்று
ஹீரோவுக்குத் தெரியுமோ, தெரியாதோ!
”புதுசா இறங்குன ஆப்பிள் பழம்தான் என்றில்லை… நேத்து பழுத்த
எலந்தைப்பழம் ரேஞ்சுக்கும் ஒரு சேஞ்சுக்கு சாரு இறங்கி வருவாரு…” என்பதும்
ஒரு ‘புகழ்’ வார்த்தை! அழகுப் பெட்டகத்துடன் இவர் காட்சியளிக்கிற
ஷூட்டிங்கின்போது, மிலிட்டரி மிடுக்கோடு சீனியர் நடிகை எட்டிப் பார்க்க…
அவரைத் துரத்தித் துரத்திப் பேசிக் கவர்ந்தாராம். ”இன்னிக்கு கேரவன்
வேனுக்கு வாடகையைக் கூட்டிக் கொடுக்கணும்பா…” என்று புரொடக்ஷன் மேனேஜர்
பொருள் பொதியப் புலம்பினாராம். ”பாகிஸ்தான் பார்டரில் துப்பாக்கியை
தூக்கறவங்களை நினைச்சாத்தான் பாவமா இருக்குப்பா!” என்றும் பேசிக்
கலைந்ததாம் யூனிட்.
பார்க்கிற மனுஷனுக்குள் இருக்கிற மனுஷன் வேறாவதும் உண்டில்லையா..?
அப்படி நம்ம ஹீரோவின் சூப்பர் பாசிடிவ் அம்சங்களும் ஏராளம். பொது விஷயங்கள்
பற்றிய அக்கறையே இல்லாமல், இந்திய ஜனாதிபதியின் பெயர்கூடத் தெரியாமல்,
கோடிகள் மட்டுமே குறியாக அலைகிற சினிமா உலகத்தில்.. நாலு விஷயங் களைத்
தேடிப்பிடித்துப் படிப்பதும். உருப்படியான பல நல்ல விஷயங்களை ஆர்வத்தோடு
நேரம் ஒதுக்கிக் கற்றுக் கொள்வதும் நம்மவரின் தனிச் சிறப்புகள். வெளியே
என்னதான் ஆட்டம் – பாட்டம் – கொண்டாட்டம் என்றாலும், குடும்பத்துக்கு இவர்
கொடுக்கிற தனி மரியாதையை மற்ற பலரும் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்!
பேரிலேயே மது இருப்பதாலோ என்னவோ. அப்படி இப்படி தள்ளாட் டம். மற்றபடி,
சினிமாக்காரர் என்ற பந்தாவே துளிகூட இல்லாமல் தன் ரசிகர்களோடு இவர்
பழகுவதும், பொதுக் காரியங்களுக்கு காசு – பணம் கொட்டிக் கொடுத்து மன
நிம்மதியை அடைவதும் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள்தான்!
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.
சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான்
பொறுப்பல்ல.