கதைப்படி நாயகி பள்ளிக்கூட மாணவி என்பதால் தேடிப்பிடித்து அந்த செர்ரிப்
பழம் போன்ற அழகிய டீன் ஏஜ் பெண்ணை பெங்களூருவில் இருந்து அழைத்து
வந்தார்கள். படத்தை இயக்குவதாக மான் டைரக்டரின் பேரில் அறிவிப்புகள்
வந்தாலும்… படத்தை இயக்கியது… அவரின் வாரிசுதான். செர்ரி நடிகையின்
கிறங்கவைக்கும் கண்கள் கிறுகிறுப்பு மூட்டுபவை. “இளமை துள்ளிவழிய’ அந்த
படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
சில நாள் படப்பிடிப்பிற்குப்பின் மான் டைரக்டர் தனது பாலிஸியை விவரிக்க ஆரம்பித்தார்.
‘”எனக்கு உடன்படாவிட்டால் இப்போதே படத்திலிருந்து விலகிக்கொள்ளலாம். உடன்பட் டால் நீ பெரிய நடிகையாகிவிடலாம்.’’
ஏற்கனவே கன்னடத்தில் ஒரு படம் நடித்திருந்தாலும்… தமிழில் நடித்தால்தான்
பாலிவுட் வரை கவனிக்கப்படுவோம்… என்கிற ஆசையில்தான் தமிழில் நடிக்க மிக
ஆர்வமாக இருந்தார் நடிகை. அந்த ஆசை அணைந்துவிடாமல் தூபம் போட்டு
எரியவிட்டார் நடிகையின் அம்மா.
இப்போது டைரக்டரின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் கனவெல்லாம் தகர்ந்து போகும் என்பதால்… சம்மதித்தார்.
தொடர்ந்து படப்பிடிப்பு… நடைபெற ஆரம்பித்தது. அவுட்டோர் ஷூட்டிங்!
டைரக்டரை கவனித்தாகி விட்டது… இனி எந்த தொல் லையும் இருக்காது… என நம்பி
கதாநாயகியாகப் போகிற கோதாவோடு வலம் வந்தார். பேருக்கு டைரக்டராக இருந்தவர்
பேரின்பம் கண்டு விட்டார்.
பிராக்டிகலாக டைரக்டராக இருப்பவர் பிரச்சனையை ஆரம் பித்தார்.
ஹோட்டல் ரூமில் தங்கியிருந்த நடிகையை இண்டர்காமில் அழைத்து இம்சை தர ஆரம்பித்தார்.
‘”அதான் டைரக்டரின் விருப்பப்படி நடந்துக் கிட்டேனே’’
‘”இங்க நான்தான் டைரக்டர்’’
‘”என்னசார் இது? அவர் அப்படிச் சொன்னார். நீங்க இப்படிச் சொல்றீங்களே?’’
“இந்த படத் தை தயாரிக்கிறதும் அவர்தான். அதனால் தயாரிப்பாளர் விருப்
பத்தை நிறைவேத்தி னதா நினச்சுக்க. டைரக்டர்ங்கிற முறையில் என்னைக் கவனி.
இல்லேன்னா ஷூட்டிங் நடக்காது’’
‘”போய்த் தொலையட்டும்’’ எனப் போனார்!
ஆனால் அந்த ருசி கண்ட பூனை… அடிக்கடி அழைத்துப் புசித்தது. ஒரு
கட்டத்தில் இந்தத் தொல்லை அதிகமாக… ‘”எதுக்கும் ஒரு அளவு இருக்கு. ஏன்
இப்படி என் மகளை இந்தப்பாடு படுத்துறீங்க?’’ என நடிகையின் அம்மா சண்டைக்கே
போய்விட்டார்.
பயந்து போன நடிகையோ ‘”விடும்மா. இந்தப் படத்தை எப்படி யாவது முடிச்சுட்டு அப்புறம் பேசிக்கலாம்’’என அம்மாவை சமாதானப் படுத்தினார்.
ஒரு வழியாக படம் முடிந்து ‘”இளமை துள்ள’’ வெளியான போது… நடிகையின் அழகும், நடிப்பும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
மான் டைரக்டரின் வாரிசுதான் இந்தப் படத்தை இயக்கினார் என்கிற விஷயம்
வெளியுலகிற்கும் தெரியவர… அடுத்த படத்தை தன் பெயரிலேயே இயக்கினார்.
இந்தப் படத்திற்கும் செர்ரியைத்தான் கேட்டார் டைரக்டர்.
ஆனால்.. மறுத்துவிட்டார் நடிகை.
அதன்பிறகு வேறு நடிகையை வைத்து அந்தப் படத்தை எடுத்தார். அந்த நடிகையோடு டைரக்டர் காதல் வசப்பட்டு, கல்யாணமாகி…
அந்த விஷயங்கள் இப்போது தேவையில்லை.
செர்ரி நடிகையை டைரக்டரால் மறக்க முடிவில்லை. ஒவ்வொரு படம் தொடங்கும்
போதும் செர்ரியை அழைப்பார். செர்ரி மறுப்பார். ஆனால் செர்ரி அடுத்தடுத்த
படங்களை சரியாக தேர்வு செய்யாததால் நல்ல இடத்தை தக்க வைத்துக்கொள்ள
முடியவில்லை.
திரும்ப ஒருமுறை டைரக்டர் அழைத்தபோது… மறுக்காமல் போய் சந்தித்து
குலாவினார். ஆனால்… வாய்ப்புத் தருவதாக ஆசை வார்த்த மட்டும் சொல்லி…
காரியத்தை சாதித்துக் கொண்டார் டைரக்டர்.
இப்படி பலமுறை கூப்பிட்டுக் கூப்பிட்டு தேவையை மட்டும் தீர்த்துக்கொண்டார்.
இந்த டைரக்டரும், இசையின் இளைய வாரிசும் ஒரு படத்தின் பாடல்
கம்போஸிங்கிற்காக இலங்கை சென்றனர். இருவருக்கும் ரிலாக்ஸ் தேவைப்பட்டது.
செர்ரிப் பழத்திற்கு போன்போட்டார் டைரக்டர்…
“உடனே கிளம்பி இலங்கைக்கு வாடி’’
“எதுக்கு?’’
“படம் விஷயமா பேசத்தான்’’
“இந்தப் படத்திலதான் நான் இல்லையே?’’
“இதுல இல்லேன்னா என்ன? அடுத்த படத்துல நீதானே! உன்னை பாக்கணும்போல இருக்கு. ஒடனே கிளம்பி வா.’’
“போதும்ப்பா நான் உன்கிட்ட ஏமாந்தது.’’
“கண்டிப்பா அடுத்த படத்துல சான்ஸ் தர்றேன்.’சரி விடு… நீ வந்துட்டு போறதுக்கு பணம் தற்றேன்.’’
“ஏண்டா… என்னய ……………’.’
இதற்குப்பின் இருவருக்கும் இடையேயான நல்ல தொ டர்பு, கள்ளத் தொடர்பு… என எல்லா தொடர்பும் ‘கட்’ ஆனது!
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.