ஹை க்ளாஸ் விபச்சாரம் - நடகைகள் மாடல்கள் !
சென்னையில் இப்போது ஹை க்ளாஸ் விபச்சாரம் பெருகி வருகிறது. மலை நாடுகளைப் போல செக்ஸ் ஆர்கிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும், நடிகைகள் மாடல்கள் உட்பட பல இளம் அழகிகள் இந்த விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். கால்கேர்ல்ஸ் அல்லது எஸ்கார்ட்ச் என்ற பெயரில் ஹை க்ளாஸ் விபச்சாரம் தமிழ்நாட்டு லைநகரம் சென்னையில் நடக்கிறது.
மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம்: மேனாட்டு கலாச்சாரத்திற்கு முழுவதுமாக அடிமையாகி விட்ட நிலையில், இன்று மது-மாது இரண்டுமே தேவை என்ற விஷயமாகி, அவற்றைக் கொடுக்கவும் வியாபாரிகள் தயாராகிவிட்ட நிலையில், விபச்சரத்தைப் பற்றி விவாதிப்பது வேடிக்கையான விஷயமே[1]. கோலிவுட் விபச்சாரத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. சினிமாக்களில் ஜோக்ஸ் என்ற பெயரில் உடலுறவப் பற்றி கொச்சையாக, வெளிப்படையாக சொல்லித் தரப்படுகிறது. அதற்கேற்றாற் போல கேமராக்களும் விரைவாக நகர்ந்து காட்ட வேண்டியதை காட்டவே செய்கிறது. அதனால், தெரியாதவர்களும், தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. பிறகு, பார்ப்பதை செய்து பார்க்க விரும்புகிறது மனம். இந்நிலையில் விபச்சாரம் வியாபாரமாகிறது. சில நேரங்களில் பொழுதுபோக்காக்கிறது. சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் சுலபமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது மற்றும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது சுலபமன வேலையாக பலருக்கு இருக்கிறது. “நடன கலைஞர்கள் சங்கம்”, “துணை நடிகைகள் சங்கம்”, “நடன நடிகைகள் சங்கம்”, “சினிமா பயிற்சி சங்கம்” என்ற போர்வையில் இவை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. முன்பு “பாடி-மசாஜ்” சாதாரணமாக இருந்தது[3].
வியாபார நிமித்தம் வருபவர்கள் வெளிப்படையாகவே கேட்கும் அளவிற்கு வந்து விட்ட நிலையில், சில ஹோட்டல்களில் அதற்கான புரோக்கர்கள் இருந்து செயல்படுகிறர்கள். நட்சத்திர ஹோட்டல்களில் நாகரிகமாக நடந்து முடிந்து விடுகிறது. மற்ற நிலைகளில் வெளிப்படும்போது, அகப்பட்டுக் கொள்கிறார்கள். குறிப்பாக மொபைல்போன் மூலமும், இணைத்தளங்கள் வழியாகவும் தொயர்பு கொண்டு ஏற்பாடு செய்வதால், அகப்படாமலும் தப்பித்து விடுகின்றனர். கடந்த டிசம்பரில் இணைத்தளம் மூலம் விபச்சாரம் செய்து வந்த பெண்ணை, போலீஸார் கைது செய்தனர் பல நேரங்களில் விபச்சாரம் கடனை அடைக்கும் வழியாகவும் பயன்படுத்துகின்றனர் அதற்காகவே “நிதி நிறுவன ஆலோசகர்கள்” வேலைசெய்து வருகிறார்கள். இதில் பிளாக்-மெயில் செய்யும் வேலையும் இணைந்து விடுகிறது. விபச்சாரத்துடன் புருனோகிராபியும் சேர்ந்து விடுகிறது இதனால், ஈவு-இரக்கம் இல்லாமல், சிலர் எல்லாவிதமான குற்றங்களிலும் ஈடுபடுகின்றனர். அரசியலும் கலக்கும் போது, சட்டங்கள் மீறப்படுகின்றன கற்ப்பைப் பற்றி கேவலமான கருத்துகளைச் சொல்லும போது, விபச்சாரம் பெருகத்தானே செய்யும்? தார்மீகம் எங்கு இருக்கும்? இருப்பினும் “நடிகைகளின் கற்ப்பைப்” பற்றி பேசினால், நடிகைகளுக்கு கோபம் வருகிறது
விபச்சாரத் தடுப்பு போலீஸாரின் நடவடிக்கை: சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய் குமார்சிங் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர் சினிமா பட வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர்களை போலீசார் கைது செய்தனர் சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க அதன்படி மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர் ராதிகா, கூடுதல் துணை ஆணையாளர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் பாலியல் தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் கிங்ஸ்லின், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ ஆகியோர் சமீபத்தில் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலை வைத்து, அத்தகைய புரோக்கர்கள் சிலரிடம் வாடிக்கையர் போல பேசி, பெண்களைக் கேட்டனர். மறுமுனையில் பேசிய நபர் தன்னிடம் துணை நடிகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட இடத்திற்கு ரூ. 10 ஆயிரத்துடன் வந்தால் அழைத்து செல்வதாக கூறினார். இதையடுத்து வாடிக்கையாளர் போல் சென்ற பாலியல் தடுப்பு பிரிவு போலீசாரை தி.நகரில் சரோஜினி தெருவில் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். அவர்களை பின் தொடர்ந்து சென்ற ஆய்வாளர் அந்த நிறுவனத்தில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பிறகு அதிரடியாக புகுந்து அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்த செல்வநாயகன் (54) மற்றும் அவரின் உதவியாளர் ஞானபிரகாசம் (64) ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.
திரைப்படம் தயாரிப்பவர் விபச்சாரத்தையும் தொழிலாக செய்கிறாராம்: விசாரணையில் செல்வ நாயகன் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா தயாரிப்பதாகவும், சில படங்களுக்கு துணை இயக்குனராக இருந்ததாகவும் தெரிவித்தார். தற்போது ‘பேசாதே’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்குவதாகவும் கூறினார். இதே போல் சினிமாவில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக சென்னை ஆழ்வார்திருநகரில் ஒரு அபார்ட்மெண்டில் 3 இளம்பெண்களை தங்க வைத்து பாலியல் தொழில் செய்து வந்த நாகேந்திரன் (50) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சினிமா மேக்கப்மேன் கண்ணதாசன் (30) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சென்னையைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சைதாப் பேட்டை 4-வது பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குடும்ப பெண்கள் சீரழியும் போக்கு – பணத்திற்கு ஆசை ஆடம்பர வாழ்க்கை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குடும்ப பெண்கள் பலர், வீடுகளை விபச்சார விடுதிகளாக பயன்படுத்தி பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண்கள் பலரும் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய கலாச்சார சீரழிவில் ஈடுபடுவதால் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக போலீசார் எச்சரித்துள்ளனர். சிக்கனமாக இருக்கச் சொல்லும் கணவரின் பேச்சைக் கேட்காமல், அக்கம் பக்கத்தவர்களைப் பார்த்து தாமும் அதைப்போல செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு வாழ்க்கையை பலி கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது. ஆடம்பர வாழ்க்கை, கைகளில் கரன்சி, விதவிதமான உடைகள், கூடவே உல்லாசம் என சைத்தான்கள் ஓதும் வேதத்தை கேட்டு படுகுழியில் விழுகின்றனர் குடும்பப் பெண்கள்.
வாழ்க்கை பறிபோகும்: பணத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைப்பதோடு உயிரை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதற்கு உதாரணமே சென்னை எம்.ஜி.ஆர் நகர். ஆவடி திருமுல்லை வாயலில்[14] நடைபெற்ற பெண்களின் கொலைகள். இந்த இரண்டு கொலைகளுமே கணவர், குழந்தைகளோடு குடும்பம் நடத்தும் பெண்கள் சறுக்கியதாலேயே உயிரிழந்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு தனது வீட்டை விபசார விடுதியாக மாற்றியதே திருமுல்லைவாயில் யாஸ்மினுக்கு எமனாக மாறிவிட்டது.
போலீஸ் அதிரடி நடவடிக்கை: இந்த இரண்டு கொலைகளுக்குப் பின்னர் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடந்த இரண்டு நாட்களாக குடும்பப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவர்களை கைது செய்து வருகின்றனர். பெரம்பூர் ஜமாலியா எஸ்.பி.ஓ.ஏ. காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மீனா என்ற 37 வயது பெண், ஆன்லைன் மூலம் குடும்ப பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து மாறு வேடத்தில் வாடிக்கையாளர் போல சென்ற விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் மீனாவையும் அங்கிருந்த இரண்டு குடும்பப் பெண்களையும் கைது செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்களை போலீசார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்கள் திருந்த என்ன செய்வார்கள்?
வீட்டை உல்லாச விடுதியாக்கினார்: மீனா கேரளாவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பாபு ஆந்திராக்காரர். மாதம் ரூ.20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குடியிருந்து வரும் மீனா, இதுபோன்று குடும்ப பெண்களை வரவழைத்து வீட்டை உல்லாச விடுதியாக மாற்றியதும் தெரிய வந்தது. இதற்காக தான் வாடகைக்கு இருந்த வீட்டை உள்வாடகைக்கு விட்டு அவர் பணம் சம்பாதித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதேபோல அசோக் பில்லர் அருகே விபச்சாரம் செய்த தனம் என்ற பெண் கைது செய்யப்பட்டார். ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயுர்வேதிக் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் செய்வதாக விளம்பரம் செய்து, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கேரளாவைச் சேர்ந்த திலீப், சபின் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 3 அழகிகள் மீட்கப்பட்டனர்.
கலாச்சார சீரழிவு – காரணம் ஏன், தீர்வு என்ன – சொல்வதில்லையே?: சென்னையில், வீட்டில் வைத்து விபசாரத்தில் ஈடுபடுவது நூதன கலாச்சாரமாக மாறியுள்ளது. எனவே அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள், பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது. யார்-யார் வந்து செல்கிறார்கள் என்பதையும் ஓரளவுக்கு கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர். இண்டர்நெட் மூலமாக இளைஞர்களை கவர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும், பங்களாக்களிலும் விபசாரத்தில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மற்றும் குடும்ப பெண்கள் தங்களது குடும்பத்தினருக்கு தெரிந்தும், தெரியாமலும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி எச்சரித்துள்ளார். மேலும், இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். என்னத்தான் கலாச்சார சீரழிவு என்று காரணம்
சொன்னாமல், கலாச்சாரத்தைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதில்லையே?
சென்னைக்கு அடுத்து கோவை: கோவை அருகே சொகுசு பங்களாவில் விபசாரம் செய்த டி.வி. நடிகை உள்பட 6 பெண்களையும் 2 புரோக்கர்களையும் போலீசார் கைது செய்தனர்[15]. கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு பங்களாக்களில் விபசாரம் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. குறிப்பாக சென்னையிலிருந்து சிவி, சினிமா துணை நடிகைகள் பலர் இந்தப் பங்களாக்கு வந்து போவதாக தகவல் கிடைத்தது. எனவே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோவில்பாளையத்தை அடுத்த கோட்டைபாளையம் வி.ஜே.நகரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவுக்கு இரவு நேரத்தில் விலை உயர்ந்த கார்கள் வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இந்த பங்களாவுக்கு விலை உயர்ந்த 3 கார்கள் சென்றன. உடனே போலீசார் அதிரடியாக பங்களாவுக்குள் நுழைந்தனர். அங்குள்ள ஒவ்வொரு அறையிலும் அழகிகளும், வாடிக்கையாளர்களும் இருந்தனர். இதையடுத்து அங்கு இருந்த அழகிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரணை செய்த போது சென்னையை சேர்ந்த டி.வி.நடிகை ஸ்ரீலட்சுமி (வயது 21), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டான்சர்கள் சிந்து (20), ஷீபா (21), கேரளாவை சேர்ந்த காயத்திரி மற்றும் ஆந்திராவை சேர்ந்த கவிதா (21) என தெரியவந்தது. மற்றொரு அறையில் இருந்த வேலைக்கார பெண் லட்சுமி (41), புரோக்கர்கள் பாலாஜி (38) மற்றும் கிருஷ்ண மூர்த்தி (47) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இன்டர்நெட் மூலம் அழகி தேவை என வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் அனுப்பி வைக்கும் புரோக்கர்கள்: விசாரணையில் பாலாஜியும், கிருஷ்ணமூர்த்தியும் புரோக்கர்கள் எனவும், இன்டர்நெட் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, அழகி தேவை என வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் அழகிகளை அனுப்பி வைப்பார். ஒரு அழகியை அழைத்து சென்றால் 5 நாட்கள் வரை அவர்களை இஷ்டப்படி அனுபவிக்கலாம். இதற்கு கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். 5 நாட்களுக்கும் அவர்களை எங்கு வேண்டும் என்றாலும் அழைத்து போகலாம், என்ற உத்தரவாதம் கொடுத்த பின்னரே அழகிகளை அனுப்பி வைத்துள்ளனர். இந்தப் பெண்களை அழைத்துச் செல்ல இடம் இல்லாத வாடிக்கையாளர்கள் நேரடியாக இந்த சொகுசு பங்களாவுக்கு வந்தால் போதுமாம். அங்கு அவர்களுக்கு பிடித்த அழகிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் விரும்பும் உடை, தேவையான சேவை, அதற்கான ஊதிய பங்கீடு: அங்கு வாடிக்கையாளர்கள் மனம் நோகாதபடி, அவர்களின் தேவை அறிந்து அழகிகள் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு பிடித்த உடை அணிந்து கொள்வார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு மகிழ்வித்து ஒத்துழைப்பார்கள். இதற்காக ஏதாவது கல்லூரிகள் கூட நடத்தப் படுகின்றனவோ என்னமோ? வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரூ.50 ஆயிரத்தில் புரோக்கர்கள் ரூ.25 ஆயிரத்தை எடுத்துக்கொள்வார்கள். மீதி ரூ.25 ஆயிரம் இந்தப் பெண்களுக்கு. அழகிகள் கைது செய்யப்பட்ட அறையில் இருந்து 11 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.