நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

ஹீரோ கதை - கேரக்டரோடு ஐக்கியமாகும் டைரக்டர் நடிகர்




இந்த காலத்து இளைஞர்களுக்கு காதலின் புதிய பரிமாணத்தைக் காட்டி ,வியந்து ரசிக்க வைத்த டிரெண்டான மனுஷர்தான் அவர்! கொட்டுகிற அருவியில் குதித்தாடும் ஹீரோயின் ஆனாலும் சரி… சூயிங்கம் மென்றபடி கண்ணாலேயே கற்பழிக்கிற கவர்ச்சி ஹீரோவாக இருந் தாலும்… அவர் படைத்த பாத்திரங்கள் அழியாமல் என்றும் நிலைத்திருக்கும்.
(இயக்குநராக) கேமராவுக்குப் பின்னால் இருந்தவர், முன்னால் வந்தபோதும் கூட ஆரம்பத்தில் துளியும் சோடை போகவில்லை. அவர் பேச்சென்ன. இழுக்கிற இழுப்பென்ன. ஏற்றி இறக்கி அடிக்கிற ஜோக்கென்ன. கொஞ்சம் ஓவராகவே இருந்தாலும், ரசிக்க வைக்கிற சிருங்காரமென்ன. போதும் அறிமுகம். வருவோம் அவருடைய மறுமுகத்துக்கு!
இந்த நான்ஸ்டாப்பிங் ஸ்பீக்கிங் மனுஷர் முதலில் லிவ் பண்ணிக்கொண்டிருந்தது வளைவு நெளிவான ஒருகாமெடி படைப்பாளியின் பக்கத்தில். அந்த படைப்பாளியும் ஒரு லேடி ஒளிப்பாளியும் கூடிக் குலவித் திரிந்த காதல் காலத்தில் பக்கத்தி லிருந்து பல ரகசியங்கள் பார்த்தவர் நம்ம புத்திசாலி ஹீரோ. வவுனியா காட்டு வீரரை நினைவூட்டும் இன்னொரு பரபரப்பு சினிமாக்காரருக்கும் இவர் உதவியாளராக இருந்தார்.
தனக்கென தனி ராஜ்ஜியம் அமைப்பதற்காக படுவெயிட்டான கதையோடு, இவர் பல தயாரிப்பு நிறுவனங்களில் ஏறி இறங்கியபோது படாத அவமானம் இல்லை. ஆனாலும், மனசு தளரவில்லை. ‘டைரக்டர் வாங்லையோ டைரக்டர்…’ என்று கூவி, தன்னைத்தானே விற்ப தற்காக சளைக்காமல் அலைந்து திரிந்தார். சொந்த ஊரில் மரியாதைப்பட்ட குடும்பம் இருந்தும், தன்மானம் காரணமாக, அவர்களைச் சார்ந்திருக்காமல் பலவேளை பசி, பட்டினியை தன் வயிற்றில் நெருப்பாகக் கட்டியிருந்தார். வண்டியை ஓட்டியதெல்லாம் ‘லட்சிய வெறி’ பெட்ரோல்தான்.
டபுள் மீனிங்தான் இவரை பிற்பாடு மெதுவாக சரித்துத் தள்ளியது. ஆனால், டபுள் ரோல்தான் இவரை உலகத்துக்குக் காட்டியது. ”ஊரே முழிபிதுங்கிப் பார்த்த அந்தக் கதையை ஒரு தயாரிப்பாளர்கிட்டே சொன்னபோது… அவர் கண்ணை மூடிக்கிட்டு அப்படியே சிலையாகிக் கிடந்தாருப்பா. நானும் உணர்ச்சிப் பிழம்பா ஸீன் பை ஸீனா கதறி உருகி கதையைச் சொன்னேன். கடைசியில்தான் தெரிஞ்சுது அந்த …… (தனக்குப் பிடித்த கெட்ட வார்த்தை போட்டு) நல்லா தூங்கிட்டான்னு!” என்று பிற்பாடு தன் நண்பர் களிடம் வெற்றிக் களிப்போடு இவர் சொல்லி, தன் துன்பத்தையே ரசனை ஆக்கியதுண்டு.
அந்த ரசனைதான் வெற்றிக்குப் பிறகு ஓவராக உடம்பிலும் மனசிலும் நிரம்பி வழிந்து இவரை வேறு ரூட்டுக்கு மாற்றிப் போட்டது. ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ (அதாங்க… தொண்டை எலும்பு) ஏறி இறங்க, எச்சில் விழுங்கியபடி இவர் துரத்தி அமுக்காத வெடக்கோழிகளே இல்லை!
சுற்றிலும் அசிஸ்டென்ட் டைரக்டர்கள் இருக்கிறபோதே ஹீரோயினிடம் பட்டும் படா மலும் நீல ரீல் ஓட்ட ஆரம்பித்து, மெதுவாகத் தொட்டு விளையாடவும் ஆரம்பித்துவிடுவார். அடக்கமுடியாத ஆர்வத்தில் அசிஸ்டென்ட் யாராவது இதை வைத்த கண் வாங்காமல் பார்த்துவிட்டால் போதும். அவருடைய பிறப்பை சந்தேகத்துக்கு ஆளாக்கும் வார்த்தைகளால் உரக்கப் புரட்டி எடுக்க ஆரம்பித்துவிடுவார் நம்ம ஆளு!
ஒட்டுமொத்தமாக நாலைந்து மாநிலங்கள் மனசுக்குள் ஐஸ் க்ரீம் வழிய உருகிப் பார்த்த இடுப்புக்கு சொந்தகாரரான நடிகையை இவர் வளைக்காத கோணம் இல்லை. லட்சிய வெறி இருந்த காலத்தில் அந்த டாப் அம்மணியை பயபக்தியோடு அணுகி பிலிம் பதிவாக்கிய இவரே, சடக்கென்று ஒரு உயர்வுக்கு வந்த பின் இயக்கியபோது ஃப்ரீயாகப் பின்னி எடுத்துவிட்டார் என்பார்கள். அதற்குத்தோதாக அவர் கேட்ட சம்பளத்தைவிட கூடுதலாகப் பல லட்சங்களை தயாரிப்பாளரின் கைவிட்டுக் கொடுக்கவும் வைத்தார். ‘யார் போதைக்கோ நான் ஊறுகாயா?’ என்று புரொடியூசர் முதலில் புலம்பினாலும், பிற்பாடு படம் ஓடி காசு கொட் டியபோது, ‘ஆடம்ஸ் ஆப்பிளோடு’ சேர்ந்து உட்கார்ந்து பாட்டிலை உருட்டியபடி ஜொள்ளு ராத்திரிகளைக் கேட்டு ரசித்தாராம்.
”நம்ம ஆபீசுக்கே வரவழைச்சிடுவேண்ணா… ஸீன் சொல்றேன்னு ஆரம்பிச்சு ஓடிப் பிடிச்சு இழுத்து வளைச்சு இடுப்பை ஒடிச்சுடுவேன்ல!” என்று டேபிளைத் தட்டி இவர் கொக்கரிக்க. பல்லில் கடித்த சிக்கன் தொண்டைக்குள் இறங் காமல் கடைவாயில் ஜொள்ளு விடுவாராம் புரொடியூசர். அந்த மாதிரி ரசமான காட்சிகளை விவரிக்கிற இவர் திறமைதான் ஊரறிந்த ஒன்றாச்சே!
இது போலத்தான்… ‘அறிமுகம்’ என்று சில நிமிட ரோல் கொடுத்து, பிறகு செம பாப்புலர் ஆன ஒருத்தரிடம் இவர் கஸரத்து வாங்கியதாகச் சொல்லப்படும் கதைகள். ஒரு கட்டத்தில் அந்த ஒருத்தர் புகழ் உச்சிக்குப் போனபோதும் இவர் அப்ரோச் செய்ய… சுட்டும் விழிச் சுடரால் சுட்டெரித்துவிட்டு நிரந்தரமாக இவர் திசைக்கே ‘கா’ சொன்னாராம் அந்த ஒருத்தர்.
ஆங்கிலக் கதையை (’பிக்’ என்கிற ஆங்கிலப்படம்) அதன் கதாசிரியரே பிரமிக்கிற அளவுக்கு தன் மொழிக்கு தள்ளிக் கொண்டு வருவதில் இவருக்கு இணை இவரே! பிரச்னை என்னவென்றால்… இங்கிலீஷ் கதையை ஸ்கிரீனுக்கு எடுத்தாள்வது போல. அந்த இங்கிலீஷ் படத்தில் வருகிற அந்த மாதிரி விஷயங்களை தன் பிராக்டிக்கலுக்கும் சைஸாகக் காப்பியடிப்பாராம். ஊர் பார்க்க கட்டி உருண்ட அந்த மாமியிடம் கேட்டாலே சொல்லிக் கதறுவாராம் அந்த இங்கிலீஷ் கதைகளை. பிராக் டிக்கலில் பாதியை இவர் செல்லூலாயிடிலும் அச்சடித்துக் கொடுக்க.அதை சென்சார்காரர்கள் எதிர்க்க. இவர் பேப்பர் வெயிட்டைத் தூக்கி அடிக்க. சினிமாவில் இவர் இன்னும் நிலைத் திருப்பது பெரிய விஷயம் என்றளவுக்கு ஆகிப் போச்சு ஒரு முறை. ஆமாங்க. சிரிக்கச் சிரிக்க பேசுகிற அதே அளவுக்கு மனுஷர் டென் ஷன்காரரும்கூட!
ஒரு கட்டத்துக்கு மேல் இவர் ஸ்டைல், தென்னிந்திய சினிமா உலகின் சகல இருட்டிலும் புகுந்து புறப்படுகிற சீனியர் களுக்கே புது விதமாகிப் போனது. ‘நான் இந்த படத்துல பாத்திரமாகவே வாழ்ந்திருக்கேன்’ என்று பேட்டி கொடுப்பார்களில்லையா? செம நெருக்கமான காதலர்களாக படத்தில் வருவதற்காக நிஜத்திலும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்து பார்க்க ஆரம்பித்தாராம் ஐயா. வானத்துக்கும் பூமிக்குமாக இவர் நடத்திய வாழ்க்கை பற்றி அதே ஃபீல்டில் இருக்கிற மலர்க்கணை ஹீரோவே (’மன்மதன்) பொறாமையில் புழுங்கிப் போனார் என்றால் பார்த்துக் கொள்ளலாம். பிற்பாடு தன் வீரவிளையாட்டிலெல்லாம் இவரை ஒரு பார்ட்னராக்கி மகிழ்ந்தார் அந்தமலர்க் கணை ஹீரோ.
”பறக்கிற பிளேன் சொல்லும்பாசு எங்க விளையாட்டை! மஸாஜ் மகளிரும், மஜா பீச்சும் சொல்லும் எங்க கலாட்டாவை!” என்று பிறகு மகிழ்ந்து மகிழ்ந்து அந்த மலர்க்கணை ஹீரோ விவரித்த தருணங்கள் உண்டு. ”அந்தாளோட சேராதே!” என்று ஹீரோவின் வீட்டில் செமத்தியாக மிரட்டுகிற அளவுக்கு போனதென்றால் பார்த்துக்கொள்ளலாம். ”யாருக்கு யார் பாசு கெட்டதைக் கத்துக் கொடுக்குறது? இதெல்லாம் ரொம்ப அநியாயம்!” என்று ‘ஆடம்பஸ் ஆப்பிள்’ பிறகு மற்ற நண்பர்களிடம் சலித்துக்கொண்டாராம்.
எப்படியோ நடிக்கக் கூட்டி வந்த குச்சி பால் ஐஸைவிட்டு விலகிய பிறகு இந்த ஜெக தலப் பிரதாபர் அதிகம் கண் பதித்தது அந்த நட்சத்திர நட்சத்திரத்தின் மீது. ஏக டிமாண்டில் இருந்த அவரோடு இவர் இணைந்த அந்த சினிமாவில்.பல காட்சிகளை ஊன்றிப் பார்த் தால் இவருடைய தூக்கமில்லாத கண்கள் தெரியும். பவுடரை அப்பி எவ்வளவோ மறைக்கப் பார்த்தாலும் முந்தினநாள் ரெஸ்டில்லை என்று மறைக்க முடியாமல் திணறியிருப்பார். கடல் தாண்டி நடந்த ஷூட்டிங்கில் நடந்த சித்துவேலைகள் பற்றி உடனுக்குடன் இவருடைய விளையாட்டுத் தோழருக்குத் தகவல் வர. பொஸசிவ்வில் பொசுங்கிப் போனாராம் அவர். இதனாலேயே ஒரு நட்புக் கதை நடுரோட்டுக்கு வந்து பட் டென்று புட்டுக்கொண்டு போனதாகக் கூட தகவல் உண்டு.
மரியாதைக்குரிய மைந்தனாக இவர் வேஷம் கட்டியபோது, கடந்த அத்தியாயத்தில் வந்த ஒரு வாசனைப் பெண்ணோடு பல யோசனை தூரம் பயணிக்கத் திட்டம் போட்டார் மனுஷர். சட்டென்று பாச்சா பலித்துவிடவில்லை. பொதுவாக நம்ம ஹீரோ வித்தியாசமான ஒரு டெக்னிக்கைப் பயன்படுத்துவார். ஷூட்டிங் தொடங்கும் ஆரம்ப நாட்களில் கிளாப் அடித்து ‘கட்’ சொல்கிற வரையில் மட்டுமே ஜோடியை நேருக்கு நேர் பார்த்து நடிப்பார். லைட்ஸ் ஆஃப் என்றதும் சட்டென்று தலை யைக் கவிழ்த்துக்கொண்டு தன் ஸீட்டுக்கு வந்து பம்மிக் கிடப்பார். அதாவது, செய்கிற தொழி லுக்காக வேற்றுப் பெண்ணின் முகம் பார்க்க வேண்டியிருக்காம். மற்றபடி இவர் மாதிரி சத்திய சந்தன் கிடையாதாம்!
இந்த ‘வீர பிரமசரிய விரத’த்தினாலேயே சில பெண்களின் ஈகோ வீறுகொண்டு கிளறப்படுமாம். அவர்களாக வந்து வியந்து நெக்குருகிப் பழகுகிறபோதும் கூச்சம் காட்டுவார். அந்த நடிகையும் இவர் கூச்சத்தைப் போக்கவென்றே கடவுள் தன்னை அனுப்பி வைத்தாக ஃபீல் பண்ணி, ‘நெருக்க டிரெயினிங்’கை கொடுக்க ஆரம்பிக்க… அதையே லைசென்ஸாக வைத்து, வசமாகக் கிடைக்கிற ஒரு தனிமை சந்திப் பில் மொத்தமாக இவர் வீழ்த்துவாராம். அப்புறமென்ன… கூச்சமாவது இழவாவது..!
இப்படியாகத்தானே இவர் போட்ட கூச்ச வேஷம் அந்த வாசனைப் பெண்ணிடம் பலிக்கவில்லை என்பதுதான் பெரும் திருப்பம். ”இந்தக் கதையெல்லாம் வேணாம். நீ என்னைக் கட்டிக்கிறியா?” என்று மொத்தமாக அவர் லைசென்ஸ் கேட்டு நிற்க… ”அதையும்தான் பார்த்துடுவோமே!” என்ற கதையாக ஒரு நாள் திடீரென்று வாசனைப் பெண்ணின் சொந்த பூமிக்கே போய், அவர் வீட்டுச் சுவரில் மாட்டியிருந்த அன்பே உருவான சாமியின் படத்து மேல் சத்தியம் வைத்து, கல்யாணத்துக்கு டம்மி தேதியெல்லாம் கொடுத்து. கெட்டிமேளம், நாகஸ்வரம், அட்சதை எதுவும் இல்லாமல் தடாலடியாக நடந்தது அந்த ரகசியத் திருமணம். அது நாலு சுவருக்குள் நடந்ததோடு சரி. சலிக்க சலிக்க சாந்தி முகூர்த்தம். அடுத்த சில நாட்கள் தொட்டும் தொடாமலும் ‘அலை பாயுதே’ ரேஞ்சுக்கு நடமாட்டம். அந்த சினிமா புராஜெக்ட் முடிகிற சமயத்திலேயே ரெண்டு பேருக்கும் ‘தன் வழி தனி வழி’ என்ற எண்ணம் வந்துவிட. வழக்கமாக சினிமாக்களில் காட்டுகிற படபடா தடதடா கோபத்தை இவரிடமும் காட்டிவிட்டு மொத்தமாக வெட்டிக்கொண்டார் வாசனைப் பெண். இப்போது அவருக்கென்று வேறொரு வாழ்க்கை. இவருக்கும் தொல்லைவிட்டது!
ஒரு மனுஷனைப் பத்தி சொல்றதுக்கு நல்ல விஷயமே கிடையாதா?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.முருங்கைக்காய் மாஸ்டருக்கு அடுத்தபடியாக கெட்டியாகக் கதை, திரைக்கதை பின்னத் தெரிந்த இந்தக் கில்லாடிக்கு ரொம்ப ரொம்ப இளகிய மனசும் உண்டு. பல சமயங்களில் குற்ற உணர்ச்சியால் மனசு குறுகுறுப்பதும் உண்டு. பரிகாரமாக, கஷ்டத்தில் இருக்கிற பலருக்கு பணமாகவும் பொருளாகவும் இவர் சத்தமில் லாமல் அள்ளிக்கொடுத்த சம்பவங்கள் உண்டு. நட்பு என்று வந்துவிட்டால்,அதற்காக உயிரையும் கொடுக்கிற நேசம் உண்டு. குடும்பத்துப் பேரைக் காப்பாற்றும் விதமாக இன்னும் இன்னும் லட்சிய உச்சங்களைத் தொடவேண்டும் என்ற வெறியும் ஏராளம்.
அதற்காகவே, ‘நடந்தது நடந்து போச்சு… நச்சுனு இமேஜைத் தூக்கி நிறுத்த ஒரு கதையை யோசிப்போம்’ என்று சீரியஸ் சிந்தனையில் இருக்கிறாராம் ஆடம்ஸ் ஆப்பிள்! திரும்பி சடக் கென்று டாப் கியர் போடுவார் என்றுதான் சொல்கிறார்கள்.
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.