வயசு முக்கியமில்லை… மனசுதான் முக்கியம்’ என்ற பாலிஸியை வைத்துக்கொண்டு,
‘ஆன்ட்டி’ க்ளைமாக்ஸ் பண்ணுவதில் கில்லாடிகளாக இரண்டு பேரை குறிப்பிட்டுச்
சொல் கிறது, தென்னிந்திய சினிமா உலகம். அந்த இரண்டு பேரில் ஒருத்தர்,
பெரும்பாடுபட்டு முன்னுக்கு வந்த பலசாலி. அவரைப் பற்றி அப்புறம்
பார்ப்போம். தன் அப்பா புகழால் கேமராமுன் அறிமுகமான இன்னொரு
குதிரையோட்டிதான் இப்போது நாம் பார்க்கப் போகிற ‘ஆன்ட்டி’ வளைப்பு அரச
குமாரர்!
சேர நன்னாட்டிளம் பெண் களைவிட தமிழ்நாட்டு வாசனை யில்தான்
அரசகுமாரருக்கு அதி கிறக்கம். இன்னும் சரியாகச் சொல்வ தானால், இங்கேதான்
சில நட்சத்திரங்களின் அம்மாக்களுக்கு அவரோடு அப்படியரு நட்பு!
மண் மாறி நடிக்க வருவதற்கு முன்பே – சொந்த பூமியில் இவர் அறிமுகமான
சமயத்திலேயே – மயக்கும் மல்லிகையோடு இவரைத் தொடுத்து ஜாங்கிரி எழுத்தில்
(மலையாளம்) கிசுகிசுக்கள் வந்து கொண்டுதான் இருந்தன. தம்பி வயசோ, தாத்தா
வயசோ… அன்பு காட்டினால் அடங்கிப் போகிற வீக்னஸ் கொண்ட மல்லிகை நடிகை.
ஓங்குதாங்கான இந்தத் தம்பியைப் பார்த்ததும், தாங்க முடியாதஅன்பு கொண்டு
தாவிக்கொண்டே இருந்தார், நம்ம அரச குமாரர் மீது. இருவரும் கண்ணாலம் பண்ண
நாள் குறித்து விட்டதாக ஒரு பத்திரிகை நியூஸ் போட… அதுவரை பொறுத்திருந்த
சீனியர் இயக்குநர் (லோகிததாஸ்) ஒருவர் பொங்கிப் போய்விட்டாராம்.
மல்லிகையைத் தன் சிஷ்யை என்று சொல்லி எப்போதும் பொத்தி வைத் திருந்த
இயக்குநருக்கு, ‘அப்படி இப்படி போனாலும் பரவாயில்லை. ஒரேயடியாகப் போகவிடக்
கூடாது’ என்று வைராக்கியம்.
அரசகுமாரரின் அப்பாவையே கூப்பிட்டு நறுக் கென்று டோஸ்விட்டு,
‘பக்’கென்று ஒரு பயமுறுத்தலும் விட்டார், அந்த சீனியர் இயக்குநர்.
பயந்துபோய்க் கண்டித்தார் அப்பா. ‘இந்தக் காதல் தேறாது’ என்று அந்த
மல்லிகைப் பெண்ணும் திடீர் மறுப்பு காட்டி விட, ‘இனிமேல் காதலே ஒரு
டைம்பாஸ்தான்’ என்று தப்பான வைராக்கியம் பிறந்துவிட்டது அரச குமாரருக்கு.
அவ்விட பூமியிலேயே சிங்கிள் டீ குடிக் கிற மாதிரி சுடச்சுட இன்னொரு
நடிகையைப் பிடித்தார். விருப்பம் மாதிரி கேட்டுக்கேட்டு அவரோடு ஊர் சுற்ற
ஆரம்பித்தார். கேமரா இல்லாத காட்சித் தொலைவுகளில் நம்மவர் நன்றாகவே ரேஸ்
நடத்தினார். அதுவும் ஊரெல்லாம் பரவ ஆரம்பித்து, குடும்ப கௌரவத்துக்கு
குந்தகம் வருகிற ஆபத்தைக் காட்டிக் கொடுக்க, அப்பா சட்டென்று ஒரு
முடிவெடுத்தார்.
‘மகனே! நீ பத்திரமா வேறு மாநிலத் துக்குப் போய்த் தொழில் பண்ணு’ என்று,
ஊர் மாறி வாய்ப்புகளை வாங்கிக்கொடுத்தார். அப்படி வந்த இடத்தில்… முதலில்
வில்லன் வேடம் அடுத்ததே சாக்லெட் ஹீரோ காரெக்டர். இங்கேயும் வாசமான பேரில்
தான் விழுந்தது புது நட்புக்கான அச்சாரம்.
அந்தப் புதுமுக நட்சத்திரத்தின் கனிவுப் பார்வை இந்த ராஜகுமாரர் மீது
விழுந்தது. அந்தக் கன்றின்மேல் ஏற்பட்ட கவர்ச்சியால் அதன் வீடு தேடிப்
போய்வந்த இந்தக் காளை மீது… திடீர் திருப்பமாகப் தாய்ப் பசுவின் பார்வையும்
படிந்தது.
நிறத்தால் சற்று கறுத்த அந்த அறிமுக நாயகி, இவரின் தேங்காய் எண்ணெய்
பளபளப்பில் தவித்து உருக. கலையுலகையே கரைத்துக் குடித்த அம்மாவும் இவரைத்
தலையில் தூக்கிக் கொண்டாட. பிறகு, நடந்த சில சம்பவங்கள் வருத்தமானவை…
திடுக்கிட வைப் பவை. ஆனாலும், எப்படியோ… அந்த இருமுனை உறவு இடையிலேயே
அறுந்ததில் பெருமைக் குரிய இன்னொரு பெரிய மனிதர் நிம்மதி யானார்!
(பாக்யராஜ்)
அடுத்தபடியாக அரசகுமாரர் தன் ஜாதக யோகத்தை டெஸ்ட் பண்ணிப் பார்த்தது,
ரொம்ப சென்சிடிவ்வான இடம். ஜாடையாகப் பேசும் இடத்தில் கமிட் ஆன அரசகுமாரர்,
அங்கே வந்த நாயகியிடம் லேசாகச் சீண்டிப் பார்த்தார். யூனிட்டில் மிக மிக
சிலருக்கு மட்டுமே தெரியும் – இவர் அடித்த ‘ட்ரை’ எத்தனை என்று! நாயகி
வேறொரு வீட்டுக்கு வாழப்போகிறவர் என்று தெரிந்தும், இவர் நூல் விட்டுப்
பார்த்தார். அப்படி இப்படி கண்களை உருட்டி அந்த நாயகி எச்சரித்த
வெப்பத்தில் சட்டென்று ஒருநாள் பின் வாங்கினார்.
வந்த இடத்தில் குருவான இன்னொரு ராஜாவுக்கு (பிரகாஷ்ராஜ்) விஷயம்
தெரிந்தபோது, இவரை கோபித்துக்கொண்டார். ”ஏண்டா… ஏண்டா இப்படி
அவசரப்படுறீங்க… முதல்ல காதலி. அப்புறம் என்ஜாய் பண்ணு. கடைசியாக்
கழட்டிவிடு. இதைக் கரெக்டா பண்ணாட்டி நீ சினிமாவுல இருக்கவே லாயக்கில்லை…”
என்று விரல் நீட்டி அவர் படபடப்பு அட்வைஸ் செய்ய… ‘அண்ணாமலைக்கே பால் ஊத்து
றாரே’ என்று மற்ற சில நண்பர்களிடம் பிறகு சொல்லிச் சிரித்துக்கொண்டாராம்.
பசு – கன்று விஷயத்திலேயே இந்த ஃபார்முலாவைப் போட்டுப் பார்த்தவர்தானே
இவர்!
அதென்ன மச்சமோ… ஏணி வைத்தால்கூட எட்டாத உயர வித்தியாசத்தில் அடுத்த
‘டைம்பாஸ்’ காதலும் மலர்ந்தது. வெளிச்சத் தொலைக்காட்சியில் (சன் டிவி)
கோலோச்சும் ஒரு கம்பெனியின் (ராடான்) படத்தில் நடிக்க ஆரம்பித்ததுமே… புதிய
சந்திப்பு யாத்திரை துவங்கிவிட்டது. ‘டைலமா’வுக்கு இடமே இல்லாமல் இந்த
நாயகியின் மொழியும் இவர் மொழியாகவே இருக்க. யூனிட் ஆட்களுக்குப்
புரியாதென்று நினைத்து மதர்மொழியிலேயே கிரீன்ரசம் வழியும் வசனங்களை
இருவரும் பேசிக் கொள்வார்கள். பத்து ஊர் தண்ணி குடித்த யூனிட் ஆட்களோ
கவனித்தும் கவனிக்காத மாதிரி தலையிலடித்துக்கொண்டு நகர்வார்கள்.
ஒரு கட்டத்தில் நடிகை இவரை சின்சியராகக் காதலிக்கத் தொடங்கிவிட… குறுவை
சாகுபடியாக முடிய வேண்டிய நட்பை வேண்டுமென்றே இவரும் இழுத்தார். அடிக்கடி
தன்னூருக்கு நடிகையை ரகசிய டூர் கூட்டிச் செல்வதும், அங்குள்ள தன்னுடைய
நண்பர்களின் ரிசார்ட்டில் வைத்து கேமரா இல்லாமல் டூயட் பாடுவதுமாக கொஞ்ச
நாள் ஓட்டினார்.
அம்மணிக்கு காதல்தீ கன்னாபின்னாவென்று பற்றி எரிய ஆரம்பித்தபோது…
அடுத்து ஒரு படம். அங்கேயும் தன்னூர் நடிகை என்று புது கனெக்ஷனுக்கு இவர்
அடிபோட்டிருந்தார் . சான்ஸ் தேடி அலைகிற கேரக்டர் . ஆனால், ஷூட்டிங் நடுவே
இவர் தேடிய சான்ஸே வேறு! உள்ளூரில் மிகவியந்து பேசி, நடிகையிடம்
‘ஆட்டோகிராப்’ வாங்குவதில் ஆரம்பித்தார். தீவு பூமியில் தொடர்ந்த
படப்பிடிப்பின்போது ஐஸ் மலைகளைத் தூக்கி வைத்தார். ‘அந்தம்மாவோட கண்ணழகை
வர்ணிச்சே நம்மாளு நாப்பது கவிதை எழுதிப்புட்டாருங்க’ என்கிறார்கள்
யூனிட்டார். லாங்-ஷாட்டில் கேமரா வைத்து யூனிட் நிற்குமாம்… இங்கே
அடிக்குரலில் புகழாஞ்சலி மூலம் வழக்கமான ‘ட்ரை’ நடக்குமாம்.
ஒருவழியாக புது டிராக்கில் அடுத்த ரேசும் ஆரம்பமாகிவிட… ஷூட்டிங்
முடிந்து சென்னை வந்தால், செமத்தியான பூகம்பம். முந்தைய குதிரை ஓடிவந்து,
இன்றைய குதிரையிடம் காச்மூச்சென்று கத்தித் தீர்த்தது. கத்துவதற்குத்தான்
இருக்கிறதே அவர்களின் பொது மொழி! ”எங்கிட்ட இருக்குது, நான் குடுத்தேன்…
இதுல உனக்கென்ன வலிக்குது?” என்று ஆரம்பித்து இன்றைய நாயகியும் வீம்புக்காக
சண்டை போட.”அந்தாள்கிட்டே பேசிக்கறேன்” என்றபடி அரசகுமாரரைத் தேடிவந்து
சட்டை பிடித்தார் முந்தைய நாயகி. தன் அரசியல் தொடர்புகளையெல்லாம் சொல்லி
இவர் நாயகனை உலுக்க… அவருக்கு வியர்க்க. ‘நீயும் வேணாம்… அவளும் வேணாம்’
என்று தன் பிரச்னைக்குத் தானே வித்தியாசமாக ஒரு தீர்ப்பு சொல்லித்
தப்பினாராம்.
இன்னும் என்னவென்று சொல்வது… மங்களகர நடிகை இவரோடும் கிரிக்கெட்
ஆடியிருக்கிறார்; இவருடைய மூன்றெழுத்து வெளிநாட்டு காரே பல கதைகளைச்
சொல்லும் என்கிறார்கள், பற்றியெறிந்த அந்த கனெக்ஷன் பற்றி!
‘லேட்டஸ்ட் நியூஸ் என்னப்பா?’ என்று சத்தம் வராமல் புது யூனிட் டில்
விசாரித்தால்… ”நீ நினைக் கிறதேதான் ஜூனியர் பூனை! பருத்திக்காட்டம்மா
பேருக்கு அடுத்த அப்ளிகேஷன் போட்டாரு. இப்போ ஜோரா மணிச் சத்தம் கேட்குது!”
என்று சொல்லி அசர வைத்தார்கள். ஆக, மலர் தாவிப் பறக்கிற போட்டியில்
ஐயாதான் இப்போ நம்பர் ஒன் போல..!
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.
சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான்
பொறுப்பல்ல.