அந்த நடிகையை வைத்து படம் பண்ணும் ஐடியாவைச் சொன்னார் அரும்பொருள்
தொகுப்பு டைரக்டர். திரையில் தோன்றும் நட்சத்திரம் தரையில் அதுவும் தங்கள்
எதிரே நின்றதால் நம்பிக்கை வைத்து ஃபை னான்ஸ் பண்ணியது அந்த ஆசிரம
நிர்வாகம். ஆனால் சொன்ன படி படம் எடுக்காததால் பணத்தை இழந்த நிர்வாகம்
டைரக்டர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. டைரக்டரையும்
ஆசிரமத்திற்கு இனிமேல் வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டது.
நடிகை பிரபலமாகத் தொடங்கினார்.
ஷாப் இருக்கும் ஸ்ட்ரீட் படத்தில் நடித்த நடிகைக்கு பெரும் புகழ்
கிடைத்தது. பிரபல டைரக்டர்களின் பார்வையெல்லாம் நடிகை மீது விழுந்த
நிலையில்….
“ஷாப் ஸ்ட்ரீட்’ படத்தில் நடித்த புதுப் பையன் மீது நடிகைக்கு ஒரு இது
உண்டானது. அந்த புது நடிகருக்கு தன் அன்புப் பரிசாக விலையுயர்ந்த உடைகளை
பரிசளித்தார் நடிகை.
ஆனால்… அடுத்தடுத்து அந்த புது நடிகர் பெரிய அளவில் கிளிக் ஆகாத தால்….
இருவருக் கும் இடையே யான பிரியத்திற்கு தடை போட்டு பிரித்தார்கள்
அரும்பொருள் டைரக்டரும், நடி கையின் அம்மா வும்.
இது ஒருபுற மிருக்க…
நடிகையின் அம்மாவே கதி என இருந்தார் (இருக்கிறார்) அரும்பொருள். இதனால்
அவரை காதலித்து மணந்த “தேவ’ நடிகை டை ரக்டரிடம் பிரச் சினை பண்ண
ஆரம்பித்தார்.
டைரக்டரின் “மிராசுதார்’ படத்தில் நடித்த போதுதான் இந்த நடிகைக்கும்,
டைரக்டருக்கும் காதல் கண்ணாமூச்சி ஆட்டம் ஏற்பட்டது. சின்னக்கவுண்டரின்
கொழுந்தியாளா கவும் நடித்திருப்பார் இந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
“ஓ.கே. அந்த தொடர்பையே விட்டுவிடுகிறேன்’’எனச் சொன்னபடி தொடர்பை
கைவிட்டார். ஆமாம்… மனைவியாக்கிக் கொண்ட நடிகை யை அடித்து உதைத்து
துரத்திவிட் டார். கண்ணீரும் கவலையுமாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த
நடிகை… “என் காசுபணம், நகையெல்லாம் புடுங்கிக்கிட்டு டைரக்டர் என்னை
அடித்து உதைத்து கொடுமைப் படுத்து றார்’’என புகார் செய்தார்.
சுதந்திரமாக சீறிப்பாயும் கட்சியின் முக்கியப் புள்ளிகள் பலருக்கும் நெருக்கமானவர் டைரக்டர். இதனால் அந்த புகாரின் மீது நடவடிக்கை எதுவுமின்றி கிடப்பில் போடப்பட்டது.
சுதந்திரமாக சீறிப்பாயும் கட்சியின் முக்கியப் புள்ளிகள் பலருக்கும் நெருக்கமானவர் டைரக்டர். இதனால் அந்த புகாரின் மீது நடவடிக்கை எதுவுமின்றி கிடப்பில் போடப்பட்டது.
‘”கோர்ட் மூலம் லீகல் நடவடிக்கை எடுத் துக்கங்க’’என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப் பட்டது.
“நாம வாக்கப்பட்டதே இல்லீகல். இதுல லீகல் ஆக்ஷ னுக்கு சாத்தியமா?
அப்படியே நீதி கேட்டு களமிறங்கினாலும் அரசியல் செல்வாக்கான டைரக்டர் விடு
வாரா?’’என எண்ணிப் பயந்து விம்மி அழுது… அத்தோடு விட்டுவிட்டார் நடிகை.
இந்த நடிகை அறிமுகமான படம் பொங்கல் மாசத்தில் பூவின் வாசம் வீசும் படம்.
ஆனால் வாழ்க்கையில் பூவாசம் வீசவில்லை… முட்கள்தான் கிழித்தது பாவம்.
ஷாப் ஸ்ட்ரீட் நடிகையின் அடுத்த வீட்டுப் பெண் மாதிரியான தோற்றமும்,
இயல்பான நடிப்பும் ரசிக மனங்களை கவர்ந்தது போலவே… பிரபலங்களின் மனசையும்
கவர்ந்தது. பலரும் காதல் தூதுவிட்டார்கள். எல்லா புரப்போஸுக்கும் தன்
புன்னகையையே எக்ஸ்போஸ் பண்ணினார் நடிகை.
நடிகையை ஒரு பட விழாவில் பார்த்தார் ‘”ஊர் ஊராக அலை பவர்களை’க் குறிக்கும் பெயரில் படம் எடுத்த கடல் டைரக்டர்.
ஷாப் ஸ்ட்ரீட் படம் பார்த்ததிலிருந்து சாப்பிடாமல் கொள் ளாமல் நடிகையையே
எண்ணிக் கொண்டிருந்த கடல், விழாவில் நடிகையைப் பார்த்து நலம்
விசாரித்தார். இந்த பரஸ்பர அறி முகத்திற்குப் பின்… தன்னுடைய அடுத்த
படத்தில் நடிப்பது சம்பந்தமாக அடிக்கடி நடிகையிடம் பேசி வந்த கடல்…
ஒருகட்டத்தில் தன் நோக்கத்தை நோக்கியா மூலம் சொன்னார்.
‘”நான் என் குடும் பத்தை விட்டுட்டு வந்தி டுறேன். நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்க லாமா?’’
வழக்கமான புரப் போஸ் என எண்ணி வழக்கம்போல புன்னகை சிந்திவிட்டு போனை வைத் தார் நடிகை. ஆனால்… தொடர்ந்து நச்சரிக்க ஆரம்பித்தார் கடல்.
கடல் தொடர்ந்து தன் மகளிடம் கடலை போட்டு தொல் லை தருவதை கண்டுபிடித்த
மம்மி கடுப்பானார். விஷயத்தை அரும் பொருளிடம் மூடு பார்த்து
அவிழ்த்துவிட்டார்.
ஆத்திரத்தோடு கிளம்பினார் அரும்பொருள்!
அப்புறம்?
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.