ஆத்திரத்தோடு கிளம்பிய அரும்பொருள் தொகுப்பு தன்னுடன் சுதந்திரமாக
சீறிப்பாயும் கட்சியின் ஆட்கள் சிலரை அழைத்துக் கொண்டு கடல் டைரக்டரிடம்
போனார். கடுமையாக எச்சரித்துவிட்டு வந்தார். இதில் அதிர்ச்சியான கடல்
அதன்பிறகு இந்த நடிகைமீது தனக்கு இருந்த கல்யாண ஆசையை சுத்தமாக துடைத்துப்
போட்டுவிட்டார். அப்பா ஸ்தானத்திலிருந்து நடிகைக்கு பிரச் சினைகள் வராமல்
பாதுகாத்து வருகிறார் அரும் பொருள்.
இரவிலும் விழித்துக்கொண்டிருக்கும் சிட்டி பெயரில் எடுக்கப்பட்ட
படத்தில் இந்த நடிகை நடித்தார். அப்போது, படத்தின் தயாரிப்பாளர்களில்
ஒருவரான, மதுரை புள்ளியின் மருமகனுக்கும், நடிகைக்கும் ஒருவித நெருக்கம்
ஏற்பட்டது.படப்பிடிப்பு இல்லாத நாட்களில்கூட மருமகன் அலுவலகத்திற்கு
செல்லும் நடிகை… மருமகன் முதலாளி சேரில் உட்கார்ந்திருக்க… டேபிளில் ஏறி
உட்கார்ந்து கொண்டு அரட்டை கச்சேரி நடத்துவார்.
இந்த நெருக்கம்… “இருவரும் சேர்ந்து வாழப்போகிறார்கள், இதற்காக மருமகன்
சென்னையில் வீடு பார்க்கிறார்’ என்கிற அளவிற்கு பரபரப்பாகப்
பேசப்பட்டது.அவர்களின் நெருக்கத்தை உறுதிசெய்யும் விதமாக “தல’யை வைத்து
இவர்கள் எடுத்த “ஆத்தா’ படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்துக் கொடுத்தார்
நடிகை.ஆனால் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இவர்களின் நட்பிலும்
பிரிவை ஏற்படுத்தியது.
இந்த நடிகையை வைத்து ஏற்கனவே இரண்டு படங்களை ஆரம்பித்து கைவிட்ட போதும்,
அரும்பொருள் தொகுப்பு டைரக்டரை, நடிகையின் அம்மா கைவிடவில்லை. திரும்பவும்
ஒரு படம் இயக்கிக்கொள்ள வாய்ப்பளித்தார். அதன்படி அரும்பொருளும் முக்கிய
பாத்திரத்தில் இயக்கி நடித்த அந்தப் படத்தில் இந்த நடிகையும் கிளாமர்
காட்டி நடித்திருந்தார். அந்த “காலி’’படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும்,
இந்த நடிகையின் குடும்பத்திற்கும், அரும்பொருளுக்கும் இருக்கும்
நெருக்கத்தை வெளி உலகிற்கு தெரிவித்தது.
சிறந்த நடிகையாக இருந்தாலும்கூட, இன்னும் பெரிய ஹீரோக்களின் படத்தில்
கதாநாயகியாக நடிக்கும் அந்தஸ்து கிடைக்காததில் பெரிய வருத்தம் இருக்கிறது
நடிகையின் அம்மாவிற்கு. இருப்பினும் “கிரேஸ் இருப்பதற்குள் பைசா
பார்த்துவிட வேண்டும்….’ என ஏகப்பட்ட புரோக்ராம்களை புக் பண்ணுகிறார்
மம்மி. கிழக்கு கடற்கரை சாலைப் பகுதிகளில் அடிக்கடி தட்டுப் படுகிறார்
நடிகை.
இந்த டைட் ஷெட்யூலுக்கு மத்தியில் “எனிவேர் எனிடைம்’ படத்தில்
நடித்தபோது, நடிகைக்கும், அதில் நடிகைக்கு ஜோடியாக நடித்த வெற்றிகரமான
நடிகருக்கும் இடையே கிறக்கம் ஏற்பட்டது.அந்த ஹீரோ “கால் பாய்’ என ஏற்கனவே
அவரைப்பற்றி ரகசியம் பேசுகிறது கோலிவுட்.”இவர்களுக்கு இடையே இருப்பது
காதலல்ல… சந்தோஷத் திற்காக நடிகை அந்த நடிகரை வலம் வரு கிறார்’ என்றும்
சொல்லப்படுகிறது.
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.