நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

நடிகை கதை - டிவி நடிகை சின்னத்திரை தென்றல்



இன்று…
சின்னத்திரையில் சூப்பர்ஹிட் கதாநாயகியாக வலம் வருகிறார் “சுதி’ நடிகை. அவரின் வாழ்க்கையில் இப்போது “தென்றல்” அடித்துக்கொண்டிருக்கிறது.
நேற்று…
இப்போதைய விட இன்னும் இளமைத் தூக்கலாக இருந்த “சுதி’ நடிகை பல சூறாவளிகளைச் சந்தித்தவர்தான்.பாலிவுட்டில் ஷாருக்கானுடனும், கோலிவுட்டில் விஜய்யுடனும் ஜோடி போட்டுவிடும் லட்சியத்துடன் கேரளாவிலிருந்து கோடம்பாக்கம் வந்து சேர்ந்தார் சுதி.
அடக்க ஒடுக்கமாக ஆடை அணிந்து கொண்டு அம்மாவோடுதான் சினிமா கம்பெனிகளுக்கு சான்ஸ் கேட்டுப் போவார். ஆட்டோவில் போய் கம்பெனிகளில் இறங்கினால்… “பொண்ணுக்கு  பணத்துக்கு கஷ்டம் போல, காசு குடுத்தா “அது’க்கு சம்ம திக்க வச்சிரலாம்’னு சினிமாக்காரனுங்க முத்திரை குத்திடுவானுங்க…’ என ஒரு  நண்பர் ஏற்கனவே சொல்லியிருந்ததால், வாடகைக்கு கார் பிடித்து கோடம்பாக்கத்தை வலம் வந்தனர் சுதியும் மம்மியும். உப்புமா கம்பெனி களும், அதைவிட மேனாமினுக்கியான கிச்சடி கம்பெனிகளும் சுதியை பச்சடி பண்ண… அலையாய் அலைந்தன.
“என்னம்மா புரியாம பேசுறீங்க. எங்க கம்பெனியோட அடுத்த படத்துல அஜீத்தான் ஹீரோ. அவருக்கு ஜோடி நீங்கதான். அதனால இப்ப இந்த சின்னப்படத்துல நடிங்க’ என தேன்வழியப் பேசினார்கள்.
ஆனால் அதில் ஜொள்ளும் வடிந்ததால், “மோசடி’யைப் புரிந்து எஸ்கேப் ஆகி வந்தனர்.சுதி, ஆசைப்பட்ட அந்த ஹீரோவை சந்தித்து வாய்ப்புத் தேடிவிட முயற்சித்து, அது கை கூடாமல் அலுத்துப்போன நிலையில்…
ஹீரோவின் அடுத்த படம் ஆரம்பமாக இருப்பதையும், ஹீரோவின் அப்பாவை சந்தித்து பேசினால் கட்டாயம் கதாநாயகி சான்ஸ் கிடைத்துவிடும் என தகவல்கள் கிடைக்க… ஹீரோ ஃபாதரின் அலுவலகத்திற்குப் போனார்கள் சுதியும் அவரின் அம்மாவும்.
வழக்கமான சந்திப்பு-விசாரிப்பு முடிந்ததும், “நான் பிஸியா இருக்கேன். ரெண்டு நாள் கழிச்சு வந்து பாருங்க’ என்றார் ஹீரோ ஃபாதர்.
“ரொம்ப நம்பிக்கையோட இருக்கோம்… கைவிட்றாதீங்க’ எனச் சொல்லிவிட்டுக் கிளம்பி னார்கள்.
அடுத்த இரண்டாவது நாள் அம்மாவும், மகளும் ஆஜரானார்கள்.சினிமாவுக்குனு சட்டம் இருக்கு. அது இருட்டறையில் அமல்படுத்தப்படும். இதெல்லாம் தெரியும்தானே?
“ஸ்கிரீனுக்காக சில டெஸ்ட்டுகள் பண்ண ணும். அதில் ரொம்ப கிளாமரா ஸ்டில்ஸெல்லாம் எடுக்க வேண்டியிருக்கும். தயார்னா ரெண்டு நாள் கழிச்சி வாங்க’ என அம்மாவிடம் சொன்னவர்… பெண் ணிடம் திரும்பி, “ஏன் அம்மாவையும் அலையவிடுற? நீ மட்டும் வாம்மா’ என்றார். தயங்கியபடி தலையாட்டிவிட் டுப் போனார்கள். வீடு திரும்பியதும் அம்மாவும், மகளும் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
அவர் சொன்னபடி அடுத்த ரெண்டு நாளில் ரெண்டுபேருமே ஆஜர்.
“ஏன் இந்தப் பொண்ணு தனியா வரலை?’ என நெற்றிச் சுருக்கிப் பார்த்தார் அவர்.
“அந்த விஷயத்துக்கு சம்மதம்தான?’ என “சுதி’யைப் பார்த்துக் கேட்க… சுதி, தன் அம்மா வைப் பார்க்க… “நான் கேட்டதுக்குப் பதில் இல்லையே…?’ என்றபடி எழுந்து சுதியின் அருகே வந்தார் அவர்.
பதட்டமான மம்மி… “ஒங்க பையனோட நடிக்க விரும்புறா. ஹீரோகூட அட்ஜஸ்ட் மெண்ட் பண்ணிக்க தயாரா இருக்கா… ஆனா…’
“என்ன ஆனா?’
“அது வந்து… ஒங்ககூட இருக்க அவ சங்கடப்படுறா…’
“ஏன்…?’

“ஏன்?’
சுதி சடாரென எழுந்து அவரை வணங்கியபடி, “நீங்க எங்க அப்பா மாதிரி’ என படபடப்பாய் சொன்னார். கோபத்தில் சிவந்த அவர், அந்தக் கோபத்தை அடக்கிக் கொண்டார். சிறிது நேரம் மௌனமான இறுக்கம் நிலவியது.
அடுத்த சில நிமிடங்களில் “அவர்’ செய்த காரியம் இருக்கே…
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.
“அப்பா மாதிரி. அதனால்…’ என சுதி சொன்னதால் ஆத்திரமாகி, அந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்ட அவர், “அப்பாவும், அம்மாவும் தப்பு பண்ணலாமே’ என்றபடி “சுதி’யின் அம்மாவுடைய கையைப் பிடித்து இழுத்தார் “அவர்’.
அம்மாவும், மகளும் அதிர்ச்சியில் நிலைகுலைந்து… பின் சுதாரித்தனர். அவரின் கையை உதறிவிட்டு எழுந்தார் அம்மா.
“என்ன சார் இது?’
“என்ன… என்ன சார்? எதுக்குமே சரிப்பட்டு வரலன்னா பின்ன எதுக்காக ஒம் பொண்ணை சினிமாவுல அறிமுகப்படுத்தணும்?’
“ஹீரோ கூட இருக்கத்தான் என் பொண்ணு சம்மதிக்கிறாளே…’
“அப்ப, ஹீரோவே போய் பார்த்துக்கங்க. கிளம்புங்க…’ எனச் சொன்னார் அவர்.
கண் கலங்கி கனத்த இதயத்தோடு வெளியே வந்தார்கள்.சினிமாவில் “அப்படி.. இப்படி…’ இருக்கும் என தெரிந்திருந்தாலும் கூட இப்படி ஒரு சம்பவம்… அதாவது பெத்த மகள் கண் முன் தன்னை ஒருவர் கையைப் பிடித்து இழுத்ததை சுதியின் அம்மாவால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
எண்ணெய்ச் சட்டிக்குப் பயந்து எரியிற அடுப்பில் விழுவது போல இருந்தது சுதி சந்தித்த இன்னொரு அனுபவம்.
தன் சினிமா கம்பெனி அலுவலகத்தில் தனது டேபிள் மீது தன் மனைவியின் போட்டோவை வைத்திருக்கும் “மான்’ டைரக்டர் “துணைவியே துணை!’, “மனைவியே தெய்வம்’ என மனைவி புராணம் பாடுவார். இதெல்லாம் மனைவியை ஏய்ப்பதற்காக இப்படி “மனைவி தாசர்’ இமேஜை ஏற்படுத்திக்கொண்டு… உள்ளுக்குள் தன் படத்தின் நடிகைகளோடு ஷிப்ட் போட்டு லூட்டி அடிப்பார்.
இது தெரியாமல் மான் டைரக்டரின் புதிய படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டு சுதி தன் அம்மாவுடன் போனார்.அறிமுக பேச்சுவார்த்தை முடிந்தது.
“மனைவிக்கு இவ்வளவு மதிப்பு குடுக்கிற மனுஷர் நீங்களாத்தான் இருக்கும்’ என மம்மி வியந்துபோய் பேசினார்.
அந்த ராசாவின் மனசில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் வாய்ப்புத் தேடி கசந்த அனுபவங்களை விவரித்தார்.
மெல்ல ஆரம்பித்தார் டைரக்டர்.”உன் கண்ணு பேசுது, மூக்கு எடுப்பா இருக்கு, வாய்தான் கொஞ்சம் நீளம். ஆனா,  எங்க சிரிம்மா… சிரிக்கும்போது அழகா இருக்கு. ஓ.கே. நீ என் படத்துக்கு ரொம்ப பொருத்தமா இருக்க. என் படத்துல அறிமுகமாகி கொஞ்ச நாள்லயே நீ பெரிய ஹீரோயின் ஆயிடுவே. நானே உன்னைப் பார்க்கணும்னாலும் அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டுத்தான் வரவேண்டியிருக்கும்’…
டைரக்டர் சொல்லச் சொல்ல… சுதி, சுதியின் அம்மாவின் கண்களில் கலர் கலராய் காட்சிகள் விரிந்திருக்கிறது.
“சரிம்மா… நீங்க அந்த ரூம்ல வெயிட் பண்ணுங்க. பொண்ணுகிட்ட சில விஷயங்கள்… கிளாமரா நடிக்கிறது பத்தி கேட்கணும். ஒங்கள வச்சுக்கிட்டு கேட்க சங்கடமா இருக்கில்ல’ என்றார் டைரக்டர்.
டைரக்டர் மீது “மனைவி தாசர்’ என்கிற மதிப்பு ஏற்பட்டதால் “பேசுங்க சார்’ என சொல்லிவிட்டு நகர்ந்துபோனார் மம்மி.
தன் எதிரே இருந்த சுதியை எழுந்து நிற்கச் சொல்லி ஏற இறங்கப் பார்த்தார். தன் இரண்டு கைகளையும் அப்படி இப்படி காற்றில் அலைய விட்டு கேமரா ஆங்கிள் பார்த்தார்.
“லேசா குனி, இடுப்ப ஆட்டு… ‘ எனச் சொல்லச் சொல்ல… கூச்சப்பட்டபடியே செய்து காண்பித்தார் சுதி.
“என்ன இப்படிக் கூச்சப்படுற? நாளைக் கே பலபேர் முன்னால கட்டிப்பிடிச்சு நடிக்கணும், முத்தம் கொடுக்கணும்… இப்படி கூச்சப்பட்டா எப்படிம்மா?’
“நடிக்கும்போது நல்லா பண்ணுவேன் சார்.’
“ம்ஹும்… நீ ரொம்ப கூச்சசுபாவியா இருக்க. முதல்ல கூச்சத்தப் போக்கணும்…’ என்றபடியே இருக்கையிலிருந்து எழுந்து வந்த டைரக்டர், “எங்க ஒரு  லவ் ஃபீலோட என் னைக் கட்டிப் பிடி’ என்க…
“சார்..’
“என்ன சார்….’ என்றபடி இடுப்பைப் பிடித்து தன்னோடு இறுக்கி அணைத்த டைரக்டர் “இப்படித்தான் நடிக்கணும்’ என்க… அவரிடமிருந்து விடுபட முயற்சித்தார் சுதி.
ஆனால் சுதியின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உள்ரூமை நோக்கி பலவந்தமாக இழுக்க…
பயந்துபோன சுதி “அம்மே’ என அலற… அம்மா ஓடி வந்தார். டைரக்டர் தன் பிடியை விட்டார்.
“இது சரிப்படாது… கிளம்புங்க…’
“சார்…’




“ஹீரோவா அறிமுகமாகணும்னா  துட்டுக் கொடுக்கணும். ஹீரோயினா ஆகணும்னா இப்படித்தான். இதுதான் சினிமா. நான் உங்களை கட்டாயப்படுத்தல. எங்க போனாலும் இதுதான் நிலைமை. யோசிச்சு ரெண்டு நாள்ல  பதில் சொல்லுங்க.’டைரக்டர் சொல்ல… தலையாட்டிவிட்டு கிளம்பினார்கள்.
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.