பாண்டிச்சேரியில் பட்டப்பகலில் தெருக்களில் விபச்சாரம்
புதுவை நகர் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் சர்வ சாதாரணமாக விபசாரம் நடந்து வருகிறது. நகரில் பொதுமக்களோடு கலந்து சுற்றி வரும் விலைமாதுகள் சிக்குபவர்களிடம் பேரம் பேசி, முடிந்தவுடன் லாட்ஜ் களுக்கு அழைத்து வருகின்றனர். லாட்ஜ்களில் இதற்கு கணிசமான தொகை வசூலிக்கப்படுகிறது.
இதனை கண்காணிக்கும் போலீசார் லாட்ஜ் நிர்வாகத்தினரிடமும், விலை மாதர்களிடமும் கச்சிதமாக கறந்து விடுகின்றனர். இது தவிர சில லாட்ஜ்களில் நிரந்தரமாகவே விலை மாதர்களை தங்க வைத்து விபசாரம் நடத்தப்படுகிறது.
புதுவையையொட்டி வளர்ந்து வரும் பகுதிகளில் புதிய கட்டிட வேலைகள் படுவேகமாக நடந்து வருகிறது. இந்த பகுதிகளில் மிகப்பெரிய வீடு, பங்களா ஆகியவற்றை வாடகைக்கு எடுத்தும் விபச்சாரம் நடத்தப் படுகிறது.
நகரில் சில லாட்ஜ்களில் சூதாட்டத்திற்கும் பஞ்சமில்லை. இந்த சூதாட்டம் புறநகர் பகுதிகளில் தோட்டங் களிலும், முந்திரி தோப்புகளிலும் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுவையில் பல லட்சம் ரூபாய் அளவில் சூதாட்டம் நடப்பதாக பரபரப்பான புகார் எழுந்தது. அதில் தொடர்புடைய சூதாட்ட கும்பல் 15 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 2 சப்–இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
10 போலீசார் மீது துறைரீதியான விசாரணை நடந்தது. தற்போது மீண்டும் சூதாட்ட கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. புதுவையில் கொடிகட்டி பறக்கும் விபசாரம் மற்றும் சூதாட்டத்தை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.