சென்னையில் நட்சத்திர விடுதிகள் மற்றும் வீடுகளில் விபச்சார தொழிலில் ஈடுபடுவோரை கைது செய்ய கொமிஷனர் திரிபாதி, கூடுதல் கொமிஷனர் அபய்குமார்சிங் உத்தரவிட்டனர்.
இதையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் டெல்லி அழகியை வைத்து விபச்சாரம் நடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை வைத்து குறித்த புரோக்கரிடம் வாடிக்கையாளர் போல பொலிஸார் பேசினர். அப்போது குறித்த அழகிக்கு ரூ. 20 ஆயிரம் என அந்த புரோக்கர் பொலிஸாரிடம் தெரிவிக்க உடனே, அவ்விடுதிக்கு சென்று அழகியையும் புரோக்கரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே சென்னையில் ராமாபுரம் கோத்தரி நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து அங்கும் பொலிஸார் வேட்டையில் இறங்கி விபச்சார புரோக்கர்கள் செல்வி, குட்டி என்ற சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 இளம் பெண்களை மீட்டனர்.
மேலும் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆயுர்வேத கிளீனிக் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து பொலிஸார் சாதாரண உடையில் வாடிக்கையாளர் போல சென்றனர்.
அப்போது விபச்சார பெண் புரோக்கர் குமாரி, பொலிஸாரிடம் பணம் வாங்கிய போது அவரை பொலிஸார் கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த இளம்பெண்ணை மீட்டனர்.
பெரம்பூரில் விபச்சாரத்தில் அழகிகளை ஈடுபடுத்திய லோகநாதன் என்பவரை பொலிஸார் கைது செய்தனர். அங்கிருந்த 2 இளம்பெண்களை மீட்டனர்.
இந்த இளம்பெண்கள் 6 பேரும் மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். ஒரே நாளில் சென்னை முழுவதும் நடைபெற்ற இந்த அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.