நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

ஹீரோ கதை - பெரிய இடத்து மாப்பிள்ளை நடிகர்

‘கோடம்பாக்கம் யாருக்கும் மகுடம் சூட்டும் – திறமை இருந்தால்!’ என்பதை மறுமுறை நிரூபித்துக் காட்டியவர், இந்த அத்தியாய நாயகர் . முதல் படத்தில் ‘இந்த முகமெல்லாம் ஹீரோவா?’ என்று கேள்விக்குறி போட்டவர்களின் கண்களுக்கு, அடுத்த படத்திலேயே ஆச்சர்யக்குறியைக் காட்டிய திறமையானஆள்.
இரும்புக்கோட்டைப் பாதுகாப்புக்கு நடுவே நடித்தபோதும், முதல் படத்திலேயே இவருக்கும் பிராக்கெட் போட்டார் ஒரு மூன்றெழுத்து நடிகை ‘நீயும் புதுசு… நானும் புதுசு…’ என்ற ரீதியில் ஆரம்பித்து, அவர் போட்ட கொக்கிகளில் மாட்டிக் கொள்ளாமல் ஆரம்பத்தில் நடிகர் தப்பியதற்குக் காரணம் – ஆரம்ப கால வெடவெடப்பு படபடப்பு. கூடவே, நூறு பர்சன்ட் கண்காணிப்பு.
பிற்பாடு காம பாணத்தைக் கண்களாலேயே எய்து, ரசிகர் களைக் கிறங்கடித்த அந்த நடிகை… இவரை விடாப்பிடியாக மடக்கிக்கொண்டே இருந்தார். இத்தனைக்கும் அந்த நடிகைக்கும் அப்போது விடலை வயசுதான். நடிகருக்கு நண்பர்கள் அதிகம். ஷூட்டிங் இல்லாத சமயங்களில் அவர்களோடு சேர்ந்து தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, நடிகையின் துரத்தலையும் சொன்னார். செம கிக்காகிப் போன நண்பர்கள், ‘டேய், தானா வந்து விழுகிற மீனைக்கூட சுட்டுத் திங்கலேன்னா உன்னைப்பத்தி நாங்க பேசறதே வேறயா இருக்கும். போடா, அடுத்த முறை எங்களைப் பார்க்கும்போது சக்சஸ்னு சொல்லு!’ என்று செமத்தியாக உசுப்பேத்தி அனுப்பிவைக்க… அப்படித்தான் மன்மத ராகங்கள் இவருக்குள் டியூன் ஆக ரம்பித்ததாம்.
படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையும் சென்னை சார்ந்த இடங்களுமாகவே கழிந்தது. எப்போது அசலூர் ஷூட்டிங் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தார் ஹீரோ. ‘இப்ப நானும் ரெடி’ என்பதை மட்டும் ஜாடைமாடையாக நடிகையின் காதில் நாசூக்காகப் போட்டுவைத்துவிட்டார். அம்மணியும் ஸ்மைலை பதிலாகத் தந்து காத்திருக்க ஆரம்பித்தார். அவுட்டோர் தினமும் வந்தது. அந்தக் கார்கால ராத்திரியில் மற்றுமுள்ள உறவினர்கள் கண்ணிலெல்லாம் ஆற்று மண்ணைத் தூவிவிட்டு, அம்மணி காட்டில் அடைமழையை பெய்ய வைத்தார் நடிகர்.
அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது, செமத்தியாகவே நம்ம ஆளு தேறியிருந்தார். முன்னு தாரணமாக இருக்கவேண்டிய ஒருத்தரே முழு மூச்சில் புகுந்து விளையாடுகிற காட்சிகளையும் பார்த்துவிட்டதால், ஐயாவுக்கு சுத்தமாகக் குளிர்விட்டுப் போயிருந்தது. பேசாமல், சிரிக்காமல், பொத்திவைத்த அழகோடு வந்த ஒரு அம்மணியோடு இவர் போட்ட ஆட்டங்கள் பின்னாளில், வரலாறு காணாத வகையில் திசைமாறிப் போனது தனிக் கதை.
இத்தனைக்கும் செம ரிஸ்க்கான சூழலில் எடுக்கப்பட்ட படம் அது. ஏகத்துக்கும் பணத்தைக் கொட்டியிருந்தார்கள். ‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்தபோது ‘படம் ஓடினால் நான் மன்னன். இல்லாவிட்டால் நாடோடி!’ என்று சொன்னாராமே… அதுபோலத்தான் நடிகரும் தன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘இந்தப் படம் ஓடினாத்தான் தொடர்ந்து சென்னை. இல்லாட்டி நாங்க சொந்த ஊருக்குத்தான்!’ என்று பெட்டி படுக்கையோடு ரெடியாக ஜாகை மாறவும் காத்திருந்தார். ஆனால், நச்சென்று நங்கூரம் பாய்ச்சின மாதிரி சென்னையை இவருக்குப் பட்டா போட்டுக் கொடுத்தது அந்தப் படம்..!
எதிர்பார்த்ததையெல்லாம் விட சீக்கிரமா கவே சொந்த வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டவர், குடும்ப விஷயத்தில் செமத்தி யான மெச்சூரிட்டி காட்டி, அக்கம் பக்கத்தை யெல்லாம் பொறாமையில் பொசுங்க வைத்தார். மனைவி கிலோ கணக்கில் அன்பைப் பொழிந் தால், பதிலுக்கு ஹீரோ டன் கணக்கில் ‘ரிப்பீட்டேஏஏய்’ செய்தார்.
படங்கள் பல நடித்து, தனக்கென ஒரு நிலையான இடம் பிடித்த பிறகும் இவரிடம் இருக்கிற சிறப்பே, பேசும்போது யாரிடமும் காட்டுகிற பணிவுதான். டூயட் பாட பாரம் பரிய நதி நடிகையோடு ஒரு படத்தில் ஒப்பந்த மானபோது, இவர் பரமசாதுவாகப் பழகுவதைப் பார்த்து, ‘என்னே பணிவு…’ என்று வாயைப் பிளந்தாராம் அவர்..! ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும்தான் அந்தப் பணிவு என்பதை, போகப்போக நடிகைக்குப் புரியவைத்து, அவரை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டுபோனாராம் இவர். ”புடிச்சு எப்பவும் என் ஹாண்ட் பேக்குக்குள்ளேயே வச்சிக்கணும் போலி ருக்கு..!” என்று தனது ‘கிளாஸ் மேட்’ நடிகையிடம் நடிகரைப் பற்றி துடிப்பாகச் சொன்னாராம் அந்த பாரம்பரிய நதி நடிகை.
புதுசாக நடிக்கவரும் நடிகைகளும்கூட இவருடைய பணிவுகண்டு புளகாங்கிதத்தில் புல்லரித்துப் போவார்களாம். அதே சமயம், நடிகரால் ஏற்கெனவே சூடுபட்ட வேறு சிலர், ‘யோக்கியன் வர்றான், சொம்பைத் தூக்கி உள்ளே வை..’ என்கிற தொனியில் கமென்ட் அடிப்பதையும் கேட்க முடியும்.
புதுசான நதி நடிகையும் ஹீரோவின் பணிவைப் பார்த்துப் பரவசப்பட்டார். கணம் பார்த்துக் கனி பறிப்பதில் கில்லாடியான நடிகர், நதி நடிகையுடன் ஆசைதீர நீச்சல் அடித்தார். படப்பிடிப்பு முடியும் வரை வீட்டுக்குத் தெரியாமல் அவ்வப்போது ரிலாக்ஸாகவே நீச்சலடித்தார்.
இனிப்பு ஏரியாவின் பெரிய இடத்துப் பேத்தியின் விடைத்துக்கொண்டு நிற்கும், சண்டிக் குதிரைத் தோற்றம், ஹீரோவை பாடாய்ப்படுத்தியது. நடிகையின் ‘பஞ்ச்’கள் (’குத்து’) பற்றி இவர் ஏற்கெனவே கேள்விப் பட்ட விஷயங்களும் ஆர்வத்தை அதிகப் படுத்தியதாம். சக்சஸ் டைரக்டர் (வெற்றி) எடுத்த ஏடாகூடமான மனிதனின் படத்தில் அந்த நடிகையை ஒப்பந்தம் செய்ய நிர்ப்பந்தம் கொடுத்தார். முதலில் நடிகரின் அவாவுக்கு பிகு பண்ணினார் நடிகை. அவருடைய பலவீனம் எது என்று நிழலிடம் விசாரித்து, அம்மணிக்குப் பிடித்தபடி கண்ணாடி சாமான்களைக் கடைபரப்பி வைத்தே காரி யத்தைச் சாதித்துக் கொண்டாராம் இவர்.
‘தண்ணி’லை மறந்த நிலையில் தன்னிடம் நடிகர் படித்த பாடத்தை, அதற்குப் பிறகு அந்த சண்டிக் குதிரை வலிய வந்து திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்தது என்பார்கள்.
‘கிளி கடித்த பழம்’ என்றால் ஆட்டோமேட்டிக் காககிளம்புமாம் இவருக்குப் பெருமூச்சு. போதாக் குறைக்குத் தன் போட்டியாளர் கடித்தார் என்றவுடன், ஒரு அம்மணி மீது ஏகத்துக்கும் ஆர்வமானாராம். ‘இப்போ அவர் ஃப்ரீதான். போட்டிக்கு யாருமில்லை!’ என்று தகவல் வந்த ஒரு சமயத்தில்,நெருங்கிய சகாக்களுக்கு இவர் காக்டெயில் பார்ட்டி கொடுத்தார். எப்படியெல்லாம் அந்த அம்மணி தன் மனதில் புகுந்து பாடாய்ப் படுத்துகிறார் என்று சினிமாவில் வருகிற மாதிரியே சொல்லிச் சொல்லிப் புலம்பினாராம். அடுத்து தான் நடித்த படத்தில் அம்மணியை நாயகியாக்கி, ‘பணிவு ப்ளஸ் பரபரப்பு’ காட்டி பலேவாக நினைத்ததை சாதித்தாராம். படத்தில் யாருடன் ஜோடியாக நடித்தாலும் அந்த ஹீரோவுக்கு எந்தக் குறையும் வைக்காத அந்த பரோபகாரி அம்மணியும் நம்ம ஹீரோவை ஏமாற்றவில்லை.
எல்லை தாண்டி அவுட்டோர் போன போது ரெண்டு பேருக்கும் சேர்த்து ஒரே ரூம் போட்டு, தயாரிப்பாளரின் காசை மிச்சப்படுத்தியது இவர்களின் தாகம்.நம்மவருக்குத்தான் சில லட்சங்கள் செலவு, பாவம்… டாலடிக்கிற வைர மோதிரம் பரிசாகக் கொடுத்த வகையில்!
ஒரு சினிமா விழாவில் நெருக்கத்தில் பார்த்த செர்ரிப் பழ நடிகை மீதுதான் இவருக்கு அடுத்த ‘க்ரஷ்’ ஏற்பட்டது. சிரிக்கும்போது குங்குமப் பூவாகச் சிவக்கும் நடிகையின் முகம் இவரை உன்மத்தமாக்கியது. விறுவிறுப்பான கதையும், வில்லங்கமான ஆக்ஷனுமாக அமைந்த அடுத்த படத்தில் செர்ரியைத் தூக்கி ஐஸ்க்ரீம் ரோலில் வைத்தார். அயல்நாட்டில்தான் ஆட்டம் பாட்டமெல்லாம். போன இடத்தில் இவர் கேட்டுக்கேட்டு முயல்கறி வாங்கி ருசித்தை எட்டத்தில் இருந்து பார்த்த நடிகை, ‘முயல்னா அவ்ளோ இஷ்டமா?’ என்று வலியப் போய்க் கேட்டு மாட்டிக் கொண்டார். முயலின் சிறப்புகள் பற்றி நடிகர் எடுத்துவிட்ட விளக்கத்தில், குங்குமப் பூ முகம் இன்னும் ரத்தச் சிவப்பாக மாறிப் போனதாம். நடிகரின் அணுகுமுறைகள் பற்றி ஏற்கெனவே ஏஜென்ஸிகள் மூலம் அறிந்திருந்த செர்ரி, ஹீரோவின் சென்ஸ் ஆஃப் ஹியூமரிலும் மொத்தமாக முடங்கிப் போனதாம். அப்புறமென்ன… குலுங்கக் குலுங்க… சிரிப்புதான்!
தயாரிப்பாளரை ததிங்கிணத்தோம் ஆட வைப்பதில் சில சீனியர்களையே நம்மாளு மிஞ்சுவார் என்பார்கள். தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த நடிகர்களை வைத்துப் படமெடுத்த ஒரு நிறுவனத்துக்கு, இவரிடம் பெருந்தொகையை அட்வான்ஸாகக் கொடுத்துவிட்டு கால்ஷீட் வாங்குவற்குள் டங்குவார் அறுந்துவிட்டதாம். வருடக் கணக்காக இழுத்தடித்ததில் வெகுண்டுபோய் பஞ்சாயத்துக்குப் போன தயாரிப்பு, விஷயம் முழுசாகத் தெரிந்து அசந்தே போனதாம். ‘ஓஹோ… உங்களுக்கு அவர் கால்ஷீட் தரணுமா?’ என்று கவுண்டமணி படத்தில் வருகிற காட்சி போல இழுத்த பஞ்சாயத்துதாரர்கள்… ‘அவங்களுக்கெல்லாம்கூட தரணும்’ என்று காட்டிய திசையில் ஒரு பெரிய க்யூவே புலம்ப லுடன் நின்றிருந்ததாம்.
”இவர் பேரைச் சொல்லி வாங்குற அட்வான்ஸையெல்லாம் வேற ஒருத்தர் பால்தாக்கரே பூமிக்குப் போய் உடம்பை பாலிஷ் போட பயன்படுத்துறாரு..!” என்று புலம்புகிறார்கள், காசு கொடுத்து நிற்கும் தயாரிப்புத் தரப்பினர்.
”அவரில்லாமல் நானில்லை… அவரைக் குறை சொன்னால் நான் மனுஷனேயில்லை..!” என்று சொல்லி, கோபப்பட்ட தயாரிப்பாளர் களை சமாதானப்படுத்துவதும், நடிகரின் முக்கிய வேலைகளில் ஒன்று இப்போது.
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.