நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

ஹீரோ கதை - ஆட்டம் போட்ட கரகாட்ட நடிகர்

நாற்பது பாட்டம் உள்ள பெல்ஸ், அரைக்கை அகல சட்டை அணிந்து ஹீரோக்கள் கல்லா கட்டிய காலம் அது. அப்போதே, படுசிக்கனமாக ,அரை டிரவுசர் உடை அணிந்து இசைக்கு வாயசைத்தே கலெக்ஷனை அள்ளிக்கொடுத்த நடிகர்தான் இந்த அத்தியாய ஹீரோ ! நம்ம ஹீரோவும், ஓர் இசை ஜாம்பவானும் இணையும் படத்துக்கு தொடக்கவிழா நடத்தினால், பூஜை போட்ட அன்றே எல்லா ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்துவிடும். அதென்னவோ, இவர் என்றாலே இசை ஜாம்பவானும் வெளுத்துக் கட்டிவிடுவார்! இயல் பாகவே கூச்ச சுபாவம் கொண்டவர் நம்ம நடிகர். ஆரம்பத்தில் டிஸ்கவரி சேனல் முகாமில் இருந்தவர். சீனியரின் இயக்கத்தில் நடித்த நடிகைக்கு அப்போதே இந்த உதவியாளர் மீது பாசம் பொங்கிவிட்டது. டயலாக் சொல்லித் தரும்போது தயங்கித் தயங்கி தன்னிடம் பேசிய இவரைப் பார்த்து, நடிகை, முதலில் ‘களுக்’கென்று சிரித்துக் கொண்டார். அப்போதே மளுக்கென்று இவர் மனசு அவர் மீதாக முறிந்து போனதாம். அந்தப் படத்து ஷ¨ட்டிங் முடிந்தபோது, ‘பிற்காலத்தில் உங்களை நாடே கொண்டாடும்’ என்று தன் அஜந்தா கொண்டையை அசைத்தபடி கண்கள் படபடக்கச் சொல்லிவிட்டு பிளஸர் ஏறிப் பறந்தார் நடிகை. அந்தக் காலமும் நிஜமாகவே வந்தது.
நடிகரின் செல்வாக்கு நாளுக்கு நாள் எகிற… நடிகைக்கு நம்மாளு மீது கொண்ட காதல் மயக்கம் அதிக மாகியது. அரசல் புரசலாக இருந்த காதலை, எப்படியாவது கல்யாணத்தில் கொண்டுபோய் முடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தார், நடிகையின் மேனேஜர். பழைய ஜாம்பவான் நடிகர் பேரைக் கொண்ட அந்த மேனேஜருக்கு நடிகையின் சகல சாகசமும் சென்டிமீட்டர் சென்டிமீட்டராகத் தெரியும். இருந்தும், நடிகைக்கு ஏற்ற ஆள் நடிகர்தான் என்று தெளிவான தீர்மானத்தோடு, களமிறங்கிக் காரியத்தையும் கச்சிதமாக முடித்தார். இவர், பிற்காலத்தில் நடிகை வீட்டுக்குள்ளேயே உறவு கொண்டாடி ஒரு சொந்தக்காரராகவே மாறியது தனி டிராக். எப்படியோ… மேனேஜரின் மனக்கணக்குக்கு உதவியாக, வெற்றிலை செல்லத்தோடு வளையவரும் ‘தில்லானா மோகனாம்பாள் பாலையா’ ஸ்டைல் பிரமுகரும் நடிகரை அணுகி கொக்கி போட்டுக் கொண்டே இருந்தார்.
”தம்பீ… அந்தப் பொண்ணு உங்களை நினைச்சு ராத்திரி பூரா கண்முழிச்சுக் கலங்குது!” என்று சொல்லிச் சொல்லி ஏற்றிக் கொண்டே இருந்தார் ‘மிஸ்டர் பாலையா’!
ஒருவழியாக குதிரைமுக நடிகையை கல்யாணம் செய்து கொண்டு குடும்பஸ்தனாக செட்டிலானார் நடிகர். வீட்டில் ஏகபத்தினி விரதன் வேஷத்தில் வெளுத்துக் கட்டினார். வெளியிலோ, ஆயர்பாடி கண்ணனாக ஆயகலைகளை வைத்து பயிற்சி வகுப்புகளை நடத்தினார். ஹீரோவாக அறிமுகமான படத்தில் தன்னுடன் நடித்த டீச்சர் நடிகைக்கும் நம்மாளுக்கும் நெருக்கம் அதிகமானது.
கூச்ச சுபாவம் கொண்ட நம்ம நடிகருக்கு டீச்சர் நடிகைதான் சில கணக்குகளை சொல்லித் தந்து புரிய வைத்தார் என்பார்கள். அதன்பின், தொடர்ச்சியாக நம்மாளு நடிக்கும் படங்களில் டீச்சர் எப்படியோ நுழைவார்… பல்வேறு அவதாரங்களில் அசத்துவார். இந்த நிலையில்தான் நடிகரின் புதுப் படத்தில் அன்புமய கொள்கை நடிகை ஒப்பந்தமானார். உச்ச நடிகர்களுடன் மட்டுமே டிஸ்கோ லைட்டுகளின் மத்தியில் ‘செட்’டில் டூயட் பாடிவந்த ஒல்லி… புத்தம் புதுசாக, நம்மாளுடன் வயல்வரப்பில் கால்தேய ஆடி, டூயட் பாடுவதை ஆச்சர்யமாக பார்த்தது கோலிவுட். ‘ எங்க ஊரு செக்யூரிட்டி’ படத்தின் அவுட்டோர் படப்பிடிப்புக்காக நடிகரும், அன்புமயமும் மீனாட்சி ஊருக்கு போயினர். படப்பிடிப்பு நடந்த ஏரியாவிலேயே உள்ள, கெஸ்ட் ஹவுஸில்தான் நடிகை தங்க வைக்கப்பட்டார்.
‘வருஷத்துக்கு ஒரு படத்துல மட்டுமே நடிக்கிற பெரிய ஹீரோக்களோட நடிச்சா, நாம கனமா கல்லா கட்ட முடியாது. இந்த ஹீரோவோட படம் வருஷத்துக்கு மூணு வருது. அவர உங்க கட்டுப்பாட்டில் கட்டிப் போடுங்க’ என்று யாரோ சொல்லியிருந்தார்கள். அவ்வளவுதான்… மதுரையிலிருந்து திரும்பும்போது, ஹீரோவின் மனசிலிருந்து டீச்சர் மொத்தமாக ஓடிப் போயிருந்தார். அன்பு மயமே இதயமெங்கும் நிறைந்திருந்தார்.
மதுரையில் நடந்த ஜிலுஜிலுப்பான சம்பவங்களில் ஒன்றை நடிகரின் அசிஸ்டென்ட் பல வருஷங்களாக நெருங்கியவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். அது இதுதான்… அன்றைய படப் பிடிப்பு சீக்கிரமே முடிந்தது. வழக்கம் போல கெஸ்ட் ஹவுஸுக்கு புறப்பட்டார் நடிகை. ஸ்பாட்டில் இருக்கும் எல்லோரிடமும், ‘என் சொந்த ஊருக்குப் போறேம்பா’ என்று சொல்லி வைத்துவிட்டு நடிகரும் கிளம்பினார்.
இருட்டிய பிறகு நடிகையின் கெஸ்ட் ஹவுஸ் நோக்கி ஒரு கார் பறந்தது. அது வாடகைக் கார் என்றாலும்… ஓட்டிய டிரைவருக்கு தாளாத பெருமிதம். தன் காரில் இந்த நாயகன் வருவதை தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லும் துடிப்பில் இருந்தார். அதன்படியே அவர் பிறகு ஊருக்குள் வந்து உளறியதுதான், மறுநாளே சினிமா யூனிட்டை எட்டி எல்லோரையும் நமட்டுச் சிரிப்பில் ஆழ்த்தியது.
நடு ராத்திரி வரை வெயிட்டிங்கில் வண்டியை போட்ட ஹீரோ, இடையிடையே அந்த டிரைவரையே பரோட்டோ, பாயா, கொத்துக்கறி என்று வாங்கி வர அனுப்பினாராம். ”எத்தனை மணி ராத்திரியானாலும் எங்க மதுரை தூங்காது தெரியுமில்லே?” என்று ரூமுக்குள் ஹீரோ பெருமிதமாகச் சொல்வதும், சொக்கிய குரலில் கலகலத்துச் சிரித்தபடியே பாயா உறிஞ்சுவதும் பின்னிரவு நேரத்திலும் டிரைவருக்குக் கேட்டதாம்!
பிற்காலத்தில் மனசுவிட்டு தன்னோடு நெருக்கமாகப் பேசக்கூடிய மற்றொரு சீனியர் நடிகையிடம்… பெரிய பெரிய நடிகர்களின் பெயரையெல்லாம் பிறகு சொல்லி உதட்டைப் பிதுக்கிய இந்த அன்புமய நடிகை, ”என்ன இருந்தாலும் கன்ட்ரி பாடின்னா தனி பவர்தான்!” என்று வியந்தாராம்.
நீண்ட நாள் தொடர்ந்த இந்த உறவில் கொந்தளித்துப் போனாராம் பழைய டீச்சர். ஒருநாள் பாரம்பரிய ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடக்கும்போது நேராகவே அங்கே வந்துவிட்டார். அன்புமயத்துடன் ஹீரோ டூயட் பாடிக்கொண்டு இருந்தார். ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அழுத்தமாக டீச்சர் உட்கார்ந்துவிட… சற்று தூரத்தில் ராட்சத விளக்குகளின் வெளிச்சத்தில் மேக்-அப்போடு நின்றிருந்த ஹீரோ நெளிய ஆரம்பித்துவிட்டார். அன்று அன்புமய நடிகையை பிலுபிலுவென பிடித்துக் கொண்டார் டீச்சர். ”எனக்கு வந்த சான்ஸ்களை நீ எப்படி தட்டிப் பறிக்கலாம்…” என்று சக்களத்திச் சண்டை ரேஞ்சுக்கு சவுண்டு கொடுத்தபடி ருத்ரதாண்டவம் ஆடினார். இத்தனையும் நடிகரின் வீடு வரை பத்திரமாகப் போய்ச் சேர்ந்தது!
ஏற்கெனவே நடிகரின் நடவடிக்கைகள் பற்றி கேட்டுக் கேட்டு சலித்துப் போயிருந்த மனைவி, ”நான் என்ன குறை வச்சேன்… உனக்காகத்தானே சினிமாவையே தலைமுழுகித் தொலைச்சேன்!” என்று சட்டையைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தார். இன்னொரு பக்கம் நடிகரின் அகலக்கால் விவகாரங்களால் வீட்டு கஜானாவுக்குள்ளும் பெரிசாக ஓட்டை விழ ஆரம்பிக்க… தினந்தோறும் சண்டைதான். குழந்தைகள் அதைப் பார்த்து அலறிப் புலம்புவதும் அன்றாட நிகழ்ச்சியானது.
”அந்தக் கட்டத்தில்தான் சார் எங்க மேடம் மனசும் மாறிப் போச்சு. அவங்க மேலே கண்ணாக இருந்த துணிக்கடல் அதிபர் (சரவணா) ஒருத்தர் சமயம் பார்த்து கொக்கியை வீசி, மொத்தமாக மேடத்தை வளைச்சாரு!” என்று மேற்கொண்டு நடந்த கொடுமையைச் சொல்கிறார், இன்றும் அந்த நடிகைக்கு விசுவாசமாக இருக்கும் கோடம்பாக்கத்து எடுபிடி ஒருவர்.
ஆக, அந்த இல்லத்தரசி தன் கணவரைப் பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு படி தாண்டினார். அடுத்தடுத்து அவர் பல படிகள் ஏறவும் செய்தார். அதுவே, குடும்பம் ரெண்டுபடக் காரணமாகிவிட்டது. இருவரும் பிரியாவிடை கொடுத்துக் கொண்டார்கள்.
மேற்கொண்டு நடிகர் பயணித்த பாதைகளைச் சொன்னால்… ‘அட அந்த அங்கிளா?’ என்று இந்த இளவட்டங்கள் சுலபமாகச் சொல்லிவிடுவார்கள். அந்தளவுக்கு, மீடியாவெல்லாம் பரிதாபப்பட்டு கட்டுரை போடுகிற அளவுக்கு அவருடைய வாழ்க்கையில் மாறி மாறி திருப்பங்கள்…. அசாத்தியமான உயர்வுகள்… அதிர்ச்சி தரும் சரிவுகள்!
இப்போது அவர் தனிமரம்… உடம்பும் மனசும் தளர்ந்துபோய், வெளிச்ச வட்டத்துக்கு வெளியே தன் மீதே வெறுப்போடு வாழ்க்கை நடத்துகிறார். கடந்த காலத்தை ரீவைன்ட் செய்து பார்ப்பதுதான் அவருடைய அதிகபட்ச சந்தோஷமே இப்போது! எல்லாரையும்விட காலம் எவ்வளவு பெரிய லீலைக்காரன்..! ஆனால், இது நம்ம ஹீரோவுக்கு மட்டுமல்ல… நல்ல வாழ்க்கையை தொலைக்கிற எவருக்குமே புரிவதில்லைதான்!
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.