“அடப்பாவிகளா’’ என ரசிகர்களின் ஈரக்குலையை நடுங்க வைத்தது
“வீரனை’ப்பற்றி வந்த அந்தப் படத்தின் கற்பழிப்பு காட்சி. ரசிகர்கள்
திரையில் பார்த்தது கொஞ்சம்தான்.
ஆனால்… விருதுக்காக அனுப்பிவைக்கப்பட்ட அந்தப் படத்தில்… இன்னும்
கொடூரமாக இடம் பெற்றி ருந்தது அந்தக் காட்சி. கிட் டத்தட்ட “டாப்-லெஸ்’
ஸாகவே அந்தக் காட்சியில் நடித்திருந்தார் ‘”பாசமான’’ நடிகை. அதனால்தான்
அந்த நடிகைக்கு பெரிய புகழும், அவரின் சினிமா வாழ்க்கையில் மாபெரும்
திருப்புமுனையும் ஏற்பட்டது.இவ்வளவு தூரம் அந்த நடிகை இறங்கி வந்து
நடிக்கக் காரணம்… அந்த இளம் இயக்குநரின் திறமைமேல் அந்த நடிகைக்கு இருந்த
மிகப்பெரிய மரியாதை.’பாசமான’ நடிகை, டைரக்டரின் திறமையை சிலாகித்துக்
கொண்டிருக்க… டைரக்டரோ நடிகையை சிலாகிக்க ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் ஒரு இயக்கு நரை… அதிலும் விஷயமுள்ள இயக்குநரை…
சந்தோஷப்படுத்தி னால் என்ன?… என்பது போல டைரக்டரின் விருப்பத்தை நிறை
வேற்றினார் நடிகை.ஆனால்… போகப்போக நடிகை மீது காதலாய் கசிந்துருக ஆரம்பித்
தார் டைரக்டர்.
மதுரை தாண்டி… தாமரைப் பட்டி எனும் ஊரில் ரொம்பநாள் படப்பிடிப்பு
நடந்தது. அங்கே ஒரு வீட்டில் நடிகையும், டைரக்டரும் ஒன்றாக தங்கியிருந்து
பட வேலைகளில் ஈடுபட்டார்கள். இதனால் நடிகை மீதான பிரியம் நாளுக்கு நாள்
டைரக்டருக்கு அதிகரித்தது.
நடிகைக்கு டைரக்டர் காதல் வலை வீசினார். ஆனால் அந்த வலையில் சிக்காமல்
நழுவியபடியே இருந்தார் நடிகை.அந்த க்ளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்ட போதும்
கூட… டைரக்டரின் மனம் கோணாமல் சொன்னபடி நடித்துக் கொடுத்தார்.படப்பிடிப்பு
இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த நேரம்….
“நான் என்னோட குடும்ப வாழ்க்கையி லிருந்து வெளியே வந்திடுறேன். நாம
ரெண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளலாம்’’ என்கிற கோரிக்கையை டைரக்டர்
வைத்தபோது…. அதன் சீரியஸ் தெரியாமல்…. சிரித்துவிட்டுப் போனார்
நடிகை.ஆனால்… டைரக்டர் கேட்டது சீரியஸாகத் தான் என்பது டைரக்டரின் மனசு
அறியுமே!
“நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே?’’என திரும்பத் திரும்ப…
டைரக்டர் துளைத்தெடுத்த போதுதான்…. ‘”ஆத்தாடி இந்த மனுஷன் நம்ம மேல
இம்புட்டு பித்தா இருக்காரே…’ என்கிற விஷயம் உறைத்தது. வில்லங்கமாகி
விடக்கூடாது என்பதால் டைரக்டரிடம் முகம் கொடுத்து பேசாமல்… விலக
ஆரம்பித்தார். ஆனால் டைரக்டர் விடாப்பிடியாக இருந்தார்.
‘கடைசியாக டைரக்டர் அந்த ஆயுதத்தை பிர யோகித்தார்!”நீ என்னை கல்யாணம் பண்ணிக்க லேன்னா… நான் செத்துப்போயிரு வேன்.’’
மிக உறுதியாக டைரக்டர் சொன்னதைக்கேட்டு நிலைகுலைந்து போனார் நடிகை.
“இதென்ன இம்புட்டு இம்சையா இருக்கு..’ என நொந்து போன நடிகை, டைரக்டரை உட்காரவைத்து ஆற அமரப் பேசினார்.
“அய்யா ராசா… நீங்க இன்னும் பெரிய அளவில் சாதிக்க வேண்டிய டைரக்டர்.
நான் இன்னும் நிறைய்ய படங்களில் நடிக்க வேண்டிய நடிகை. நாம கல்யாணம்
பண்ணிக்கிறதில் நடைமுறை சிக்கல் நிறைய இருக்கு. அதைவிட… மனரீதியாவும் சில
பிரச்சினைகள் காலப்போக்கில் வரும். அதனால் எனக்கு இதில் உடன்பாடு
கிடையாது’’என தெளிவாகச் சொல்லிவிட்டு கிளம்பினார் நடிகை.
படம் வெளியானது. பயங்கர ஹிட்டானது. ஒரு வருடம் தொடர்ந்து ஓடி ரெக்கார்ட்
பிரேக் செய்தது. அந்த நடிகைக்கும் இந்திய அளவில் விருதை வாங்கிக்
கொடுத்தது!நடிகைக்கு ஆசைதான்… டைரக்டரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல,
ஆனால்… மறுபடி காதல் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டால்…?அதனால் அந்த
ஐடியாவையே கைவிட்டார் நடிகை.
ஒரு வருட இடைவெளிக்குப்பின் அந்த டைரக்டர் ஒரு படத்தில் ஹீரோவாக
நடித்தார். அவருக்கு ஜோடியாக “பாசமான’’ நடிகையே நடிக்க விரும்பி…
நடிகையிடம் பேசி னார். கடுமையாகப் பேசி… நடிக்க மறுத்துவிட்டார்
நடிகை.இப்போது கூட அந்த டைரக்டர்… “முதல் சாமி’ பெயரில் எடுத்து வரும்
படத்தில்… நடிக்கும் “சந்திரமான’ மும்பை நடிகையுடன் இணைத்து பேசப்படுகிறார்
டைரக்டர்.
அம்மணி சென்னை வந்தால் ஏர்போர்ட் போய், ரிஸீவ் பண்ணி…. பிக்-அப் பண்ணி,
அம்மணி மும்பை கிளம்பினால் ஏர்போர்ட் போய், செண்ட்-ஆப் பண்ணி….‘”அய்யோ…
அய்யோ… அது வெறும் நட்புதான்’’ என மீடியாக்களுக்கு அம்மணிதான் பதில் சொல்
கிறார். டைரக்டர் சொல்லவில்லை.
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.