தன் பிறந்தநாளையொட்டி மீடியாக்களை சந்தித்தார் அந்த கவர்ச்சி நடிகை.
பேட்டி சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருந்ததால்… பல ஜாலியான கேள்விகளை
வீசினார்கள். சளைக் காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார் நடிகை.
“ஆண்களோடு வாழமுடியாது… ஆண்கள் இல்லாமல் வாழவும் முடியாது.’’’
பஞ்ச் டயலாக் போல பளீரென பதில் சொன்னார் நடிகை.அதிகப் படங்களில் பிஸியாக
நடித்துக் கொண்டிருக்காத நடிகைதான் அவர்… என்றாலும் அவரின்
கவர்ச்சிக்காகவே எப்போதும் மீடியாக்களில் அவர் பற்றி செய்திகள் அடிபட்டுக்
கொண்டிருக்கும்.
இப்போதுகூட… காக்டெயில் மோதல் சம்பவத்தை வெளியே கொண்டுவந்து பரபரப்பை மூட்டினாரே!
அவருக்கு என்னவோ… சினிமாவுக்கு வந்த புதிதிலிருந்தே அந்த பெரிய ஹீரோ
மீது அப்படி ஒரு பற்றுதல். அந்த ஹீரோவோடு ஒரு படம்… ஒரே ஒரு படம்
நடித்துவிட வேண்டும் என்கிற தீரா ஆசை. அப்படி ஒரு படத்தில் நடித்து
விட்டால் ஹைகிளாஸ், லோக்கல், உள்நாடு, வெளிநாடு… என எல்லா இடத்திலும் ரீச்
ஆகிவிடலாம் என்பது நடிகையின் எண்ணம்.
விழா ஒன்றில் அவரைச் சந்தித்துப் பேசிய நடிகை… தனிச் சந்திப்பிற்கு
அப்பாயின்மெண்ட் வாங்கினார். அதன்படியே ஹீரோவை சந்தித்து, “ஒங்களோட கண்ணு
பவர்ஃபுல்லா இருக்கு. நீங்க பார்த்தாலே பத்திக் குது’’என ஹீரோ புராணம்
பாடிவிட்டு… “ஒங்க டான்ஸ் ரொம்ப விசேஷமானது. ஒரு படத்திலாவது ஒங்ககூட
டான்ஸ் ஆடணும். அதுவே போதும்’’ என தன் கோரிக்கையை வைத்தார் நடிகை.
அடுத்த படத்தில் கண்டிப்பா வாய்ப்பு உண்டு’ என வழியனுப்பி வைத்தார் ஹீரோ.
“வடுமாங்கா ஊறட்டுங்கோ’’என ஹீரோவே சொல்லிவிட்டாரே என காத் திருந்தார் நடிகை.
ஹீரோவின் புதிய படம் தொடக்கப் படுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்க,
‘”இந்தப் படத்தில் நானும் இருப்பேன். அப்புறம் பாருங்க என் ரேஞ்ச்ச’’என தன்
நட்பு வட்டங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் நடிகை.
எதிர்பார்த்தபடியே ஹீரோவிடமிருந்து அழைப்பு வந்தது.
ஆசைஆசையாய் கிளம்பிப் போனார்.
அந்த ஹீரோவுடன் நடிப்பதெல்லாம் அழகிய நாயகிகள்தான். அவர் நினைத்தால்
அவர்களிடமே முழு சகவாசமும் வைத்துக் கொள்ள முடியும். ஆனால், கிள்ளிப்
பிடிக்க சதையில்லாமல் வழவழப்பாய் இருக்கும் அந்த நடிகைகளைவிட, கொழு கொழுனு
மப்புடன் மந்தாரமாக இருக்கும் இந்த கவர்ச்சி நடிகை மீது ஒரு கிக்
வந்துவிட்டது.
“அந்த பாடிகாட் ஹீரோ தன்னை பாடி காட்ட மட்டுமே வரச்சொல்கிறார்’ என்பது
தெரியாமலே கிளம்பிப்போனார். ஒரு ஹெஸ்ட்ஹவுஸில் சந்திப்பு நடந்தது.
‘”இந்த நடிகைக்கு இருக்கிற இமேஜில் தன்னுடன் சேர்ந்து நடித்தால் அது
தன்னுடைய இமேஜையும் பாதிக்கும்’’ என எண்ணிய ஹீரோ, வாய்ப்பே தராமல் வர
மட்டும் சொன்னார்.
அது தெரியாமல் “அடுத்த படத்திலாவது தனக்கு வாய்ப்பு கிடைத்து விடும்’ என நம்பி ஹீரோவின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டே இருந்தார்.
நந்தனம் பகுதியில் ஒரு பங்களாவையே வாடகைக்குப் பிடித்து அங்கே
சந்திப்புகள் நிகழ்த்தினார்கள். நடிகைக்கு மாத வாடகையாக ஒரு தொகையையும் தர
ஆரம்பித்தார் ஹீரோ.
நாளடைவில் ஹீரோவின் பங்களா விஜயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தாலும் கூட…
இப்போதும்கூட அந்த ஹீரோ வாய்ப்புத் தருவார் என நம் பிக்கையோடுதான் “அவரப்
போல வருமா’’என சொல்லிக்கொண்டி ருக்கிறார் நடிகை.
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.