நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

நடிகையின் கதை - நான் டைரக்டருக்கு கம்பெனி தர்றேன் – 1



ஆந்திராதான் அவர்களுக்கு ஊர்.பெண் குழந்தைகளுக்கு பொட்டுக்கட்டும் வம்சத்தைச் சேர்ந்தவர் அந்தப் பெண்மணி. ஆனால் அதையே தினசரித் தொழிலாக வைத்துக் கொள்ளாமல்… வசதி வாய்ப்பான பெரும் பணக்காரர்களின் அந்தரங்க விஷயங்களுக்கு சேவை செய்ய ஆறுமாதம், ஒருவருடம்…என காண்ட்ராக்ட் முறையில் குடித்தனம் செய்பவர். கிட்டத் தட்ட… வாடகை மனைவி என்று வைத்துக் கொள்ளலாம்.
ஆந்திரா, துபாய் என சில இடங்களில் இந்த காண்ட்ராக்ட் முறையில் பிழைப்பு நடத்திய வருக்கு… பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது.
வாடகை மனைவியாக அல்ல… கிட்டத்தட்ட வாழ்க்கைப்பட்ட மனைவியாகவே சில பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந் தார்கள்.
அப்போதுதான் மகள் பிறந்தாள்.
காலம் ஓட்டமெடுத்தது!
“மூக்கும் முழியுமாக ஆளாகி நிற்கிற மகளை சினிமாவில் நட்சத்திரமாக்கி விடலாம்…’ என்கிற லட்சி யத்துடன்,  டாக்டரிடம் சொல்லிக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தனர்.
மகளை விதம் விதமாக படம் பிடித்து போட்டாக்களை சினிமா கம்பெனிகளுக்கு அனுப்பி வைத்துக்கொண்டிருந்தார். தெலுங்கு சினிமாவிற்கும் முயற்சித்துக்கொண்டிருந்தார்கள்.
“பலன்’ என்கிற பழம் அத்தனை சீக்கிரம் பழுத்துவிடுவதாக இல்லை. சிரம திசையில் நகர்ந்துகொண்டிருந்தது வாழ்க்கை.
அப்போதுதான் “யூத் துள்ளும்’ படத்திற்கு பள்ளி மாணவி கேரக்டரில் நடிக்க… “புத்தம் புதிய முகம் தேவை….’’ என சினிமா சோர்ஸ்கள் மூலம் தகவல் கிடைக்க… அந்த கம்பெனிக்கு போட்டோக்களை அனுப்பி வைத்தார் அம்மா.
புத்தம் புதிதாகவும், முக லட்சணமாகவும், அதேசமயம் அப்பாவித்தனமாகவும் இருந்த அந்த புகைப்படங்களைப் பார்த்ததும், அந்தப் படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்த மான் டைரக்டரின் வாரிசான டைரக்டருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.
மான் டைரக்டரும் வழிந்த சலுவாவை வலது கையால் துடைத்துக் கொண்டே ‘”இந்தப் பொண்ணு ரொம்ப பொருத்தமா இருப்பா’’ என முடிவு செய்தார்… ஏக்கப் பெருமூச்சு விட்டபடி.
போட்டோவை கொண்டுவந்த தூதுவனிடம் “நேர்ல வரச் சொல்லுங்க’ என வாரிசு டைரக்டர் சொல்லியனுப்பினார்.
“அழைப்பவர்கள் நல்லவர்களா?’ என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் நல்ல நேரம் பார்த்து வீட்டை விட்டுக் கிளம்பி… படக்கம்பெனியின் ஆபீஸுக்குப் போனார்கள் அம்மாவும், மகளும். நிற்கச் சொல்லி, நடக்கச் சொல்லி, சில வசனங்களைப் பேசச்சொல்லிப் பார்த்த வாரிசு டைரக்டர் “நீங்க கிளம்புங்க. மத்த விஷயங்களையெல்லாம் சொல்லி அனுப்புறோம்’ எனச் சொல்லியனுப்பினார்கள்.
மறுநாள் தூதுவர் வந்தார். அவரின் முகமெல்லாம் புன்னகை பூத்திருந்ததால் அம்மாவுக்கு உற்சாகம்.
“டைரக்டர் என்ன சொன்னார்?’’
’”நாங்க நினைச்சு வச்சிருந்த கற்பனையான கதை நாயகிக்கு உயிர் கொடுத்ததுபோல இந்தப் பொண்ணு இருக்கா’னு சொன்னாரு மேடம்.’’
மவுண்ட் ரோட்டில் மெகா சைஸ் கட்-அவுட்டில் மகளின் உருவங்கள் வைக்கப்பட்டிருப்பதாக… சில நொடிகளில் அம்மாவின் எண்ணங்களில் காட்சி வந்து போனது.
‘”எப்ப ஷூட்டிங்காம்?’’
‘”அது ஒங்க கைலதான் இருக்கு.’’
தூதுவன் சொன்னதில் அர்த்தம் புரியாமல் பார்க்க.. தூதுவனே அர்த்தத்தை விளக்கினார்.
“எல்லாம் ஓகே. சினிமாவுல இருக்கிற வழக்கமான சம்பிரதாயம் ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கும்… இல்லேன்னாலும் தெரிஞ்சுக்கங்க… ஒங்க பொண்ணு டைரக்ட ரோட அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஒப்புக்கணும். அது ஓகேன்னா… ஒடனே… ஷூட்டிங்’’ எனச் சொல்ல… பக்கத்தில் உட்கார்ந்திருந்த மகளைப் பார்த்தார் அம்மா.
“நீ கொஞ்சம் உள்ள போ. நான் சார்கிட்ட பேசிட்டு வர்றேன்.’’
அந்தப் பெண் உள்ளே போக…. மம்மியும், தூது வனும் மனம் விட்டு பேச ஆரம் பித்தார்கள்.
அது….
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல