நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

நடிகர் கதை - நமக்கு வேண்டியத நாமே எடுத்துக்கணும்




”படிப்படியாக உழைத்து, கடுமையான சோதனைகளை சந்தித்து, படிப்படியாக வளர்ந்து இன்று உறுதியான ஓர் இடத்தைப் பிடித்திருக்கிற அந்த ஹீரோவுக்கு ரொம்பப்பிடித்த ரிலாக்ஸே ‘அது’தான்! சினிமாவில் அரை சதம் தாண்டியும் கட்டு மஸ்தாக, சிக்கென்று சின்னப் பையனாகக் காட்சியளிக்கிற அவருடைய ஆரம்ப காலத்தை தென்னிந்தியா மறந்திருக்காது.
காட்சியிலும் சரி… வசனத்திலும் சரி… ஹீரோயினுடன் நெருக்கியடித்துக் குழைவதிலும் சரி… ‘மலையாள மன்னனோ’ என்று திகைக்கும்படி தூள் பரத்தியவர் அவர். மொழி தெரிந்தவர்களுக்கு காது கூசும்படியான டபுள் மீனிங் பாடல்களில் பின்னியெடுத்தார். கிட்டத்தட்ட தன் மேல் ‘நீல’ லேபிளே போர்த்திக்கொள்ளப் பார்த்த அந்த நடிகரை, வாசமான படத்தில் பாசமாகக் காட்டிப் புண்ணியம் கட்டிக்கொண்டார் ஒரு இயக்குநர். அடுத்த டைரக்டர் பின்னிக்கொடுத்த மெல்லிய லவ் ஸ்டோரியால் ஹீரோவின் இமேஜ் இன்னும் சீரானது! அதன் பிறகு மளமளவென்று உச்சத்துக்குப் போன ஹீரோ, வாசமான டைரக்டருக்குக் காட்டிய நன்றியை வள்ளுவர் பார்த்திருந்தால், அதற் கென்றே தனியாக ஒரு ‘கண்ணீர் அதிகாரம்’ எழுதியிருப்பார்.
ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை ஹீரோ தடபுடலாக வரவேற்பார் என்கிற நப்பாசையில் அந்த டைரக்டர், நடிகரைப் பார்க்கப் போனார். ‘யார் நீங்க?’ என்ற ரேஞ்சுக்கு புருவச் சுளிப்போடு பார்த்துவிட்டு, ‘என்ன விஷயம்?’ என்று கேட்டிருக் கிறார். ‘என்னோட அடுத்த படத்துக்கு கால்ஷீட் வேணும்…’ என்று கேட்டிருக்கிறார் டைரக்டர். அவரை இழுத்தடித்த ஹீரோ, கடைசி வரை கால்ஷீட் தரவேயில்லை!
தன் முயற்சியில் ஒரு கட்டத்தில் சுத்தமாக மனம் தளர்ந்த அந்த டைரக்டரின் (இயக்குநர் விக்ரமன்) மனசுக்குள் சோகப் பெண்களின் ஹம்மிங் உச்சத்தைத் தொட… தனது முயற்சியைக் கைவிட்டார். ‘அந்த ஹீரோவே தேடி வந்தாலும் இனி அவர் பக்கம் திரும்ப மாட்டேன்!’ என்று சபதமே போட்டு விட்டார்.
அந்தக் காலத்தில் முறுக்கு மீசைக்கார ‘கனவான்’ (கே.டி குஞ்சுமோன்) தயாரிக்கும் படத்தில் நடிக்க, பல மொழி ஹீரோக்களும் போட்டி போடு வார்கள். கேட்ட சம்பளத்தைக் கொடுக்கக்கூடிய அந்தத் தயாரிப்பாளர் எடுத்த ‘லவ்’ படத்தில் ஒப்பந்தமானார் நம் ஹீரோ. நாயகி – பேஸ் மென்ட் ஸ்ட்ராங்கான மேலுலக நாட்டிய நங்கை படம் முடியும் முன்னே, தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் நட்பு அதிகமானது. அந்த அன்பின் காரணமாக, அடுத்தடுத்து அந்தத் தயாரிப்பாளர் எடுக்கும் மூன்று படங்களிலும் தானே நடிப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ஹீரோ. ஏராளமாக செலவு செய்தும், லவ் படம் ஜெயிக்கவில்லை. நஷ்டமான பணத்தை, அடுத்த படத்தில் சரிக்கட்டிவிடலாம் என்று கணக்குப் போட்ட தயாரிப்பாளர், நடிகரைத் தேடிப்போனார். வீட்டிலுள்ளவர்கள் ஹீரோ வேறு படத்தில் நடிக்கப் போயிருப்பதாகச் சொல்லி விட்டார்கள்.
அதிர்ச்சியில் குலுங்கிய தயாரிப்பு, ‘அடுத்த படத்துக்கு நான்தானே அவரைபுக் பண்ணி யிருந்தேன். என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் ஏன் இப்படிச் செய்தார்?’ என்று கோபமானார். இப்போதும் ‘அந்த நடிகர் என்னை ஏமாற்றிவிட்டார். என் கம்பெனியை படுபாதாளத்தில் தள்ளிவிட்டார்’ என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார் அந்த முறுக்கு மீசை.
நடிகருக்கு ரொம்ப அழகான குடும் பம்… ஆனாலும், வீட்டுக்கு வெளியே சிரிக்காமல் சிக்ஸர் அடிப்பார்! அணில் கடித்த பழம் என்றால், அவருக்கு அலர்ஜி! ஃபிரெஷ் ஆன காலேஜ் விடலைக் கோழி சூப்பு சாப்பிடுவதில் (சிக்கன் கறி சிக்கன் கறி… இது கோத்தகிரி கோழிக்கறி சிக்கன் கறி) சூப்பரான ஆளு இவர். அந்த ஏற்பாட்டுக்கென்றே தனியாக ஒருவரை சம்பளத்துக்கு நியமித்திருக்கிறாராம்.
செல்லமான நடிப்பு ராட்சஸனுடன் (செல்லம்.. ஐ லவ் யூ – பிரகாஷ்ராஜ்) நடிகர் மல்லுக்கட்டிய படம் சொல்லியடித்தது. அதில் ஜோடி போட்ட ‘சிக்’கென்ற நடிகையுடன் இவருக்கு ‘பக்’கென்று பற்றிக்கொள்ள… அம்மணியுடன் ஃபெவிக்கால் போட்ட மாதிரி குவிக்காக ஒட்டிக்கொண்டார். இருவருக்கும் நாளுக்கு நாள் நெருக்கம் எகிறிக்கொண்டே போவதைப் பார்த்த நடிகரின் நண்பர்கள் சிலர், ‘இதெல்லாம் நல்லதுக்கு இல்லை!’ என்று நடிகரின் இல்லத்தரசி காதுகளில் ஓதினார்கள்.
அன்று முதல் நடிகர் எங்கே படப் பிடிப்புக்குப் போனாலும், மனைவியின் ஒற்றர் ஒருவர் ஹீரோவைக் கண்காணித்துவருகிறார். பழம்பெரும் படப்பிடிப்பு ஸ்தலத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு படப்பிடிப்பில் தன் கேரவனில் இருந்த ஹீரோ, சுற்று முற்றும் பார்த்து விட்டு டபக் என்று நடிகையின் கேரவனுக்குள் புகுந்து விட்டார். இதை ஒரு ஜோடி ஒற்றுக் கண்கள் மட்டும் பார்த்தன. உடனே நடிகரின் திருமதிக்கு தகவல் பாஸ் ஆனது. காரில் வந்தாரா அல்லது ஸ்கிரீனில் நடிகர் பறப்பதைப் போல இவரும் பறந்தே வந்தாரா என்கிற ரேஞ்சுக்கு மின்னல் வேகத் தில் ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் ஆஜரானார் மனைவி.
கேரவன் கதவைத் தட்டினார். கதவைத் திறந்து வெளியே வந்த ஹீரோவுக்கும் உள்ளேயே ஒண்டிக் கொண்டிருந்த நடிகைக்கும் ஒட்டுமொத்த யூனிட்டின் முன்பாகவே சகட்டுமேனிக்கு லட்சார்ச்சனை நடத்திவிட்டுப் போனார் திருமதி.
முழுக்க நனைந்தபின் முக்காடு ஏன் என்று நினைத்தாரோ என்னவோ… நடிகர் அந்த நடிகையுடன் அடிக்கடி பண்ணை வீட்டுக்குப் பயணப்பட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் வீம்பாக நடிகையை தன் வீட்டுக்கே ஒரு நாள் அழைத்துப் போனார் ஹீரோ. அப்புறமென்ன… கலவரம்தான்… களேபரம்தான்..!
உள்ளூரில் இப்படி என்றால் வெளிநாடு போகும்போது ரூட்டே தனி. ரீலிலும் ரியலிலும் நடிகரின் தோழரான ஒருத்தர், சம்பந்தமே இல்லாமல் தானும் ஷூட்டிங்நாட்டுக்குப் போவார். ஹீரோவுக்கு வெள்ளைக்கார ரசிகைகளைத் தேடிப் பிடித்து அறிமுகப் படுத்துவதில் அத்தனை கில்லாடியாம் அந்த நண்பர்.
”அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாம, யாரையும் அதட்டிமிரட்டாம, நமக்கு வேண்டியதை நாம எடுத்துக்கிட்டா,அது தப்பே இல்லை!” என்பதுதான் நடிகரின் நண்பர் அடிக்கடி சொல்லும் உற்சாக வார்த்தைகளாம்.
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.