நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

நடிகை கதை சோ நடிகையின் சோக கதை



செஸ் விளையாட்டின் தமிழ்ப் பெயர் கொண்ட படத்தின் படப்பிடிப்பில்… ஒரு காட்சி யில் நடிகையை ஸ்ரீ ஹீரோ லேசா மோதுவது போல் காட்சி.பேலன்ஸ் தவறி கொஞ்சம் வேகமாக மோதியதால் உடனே தன் காதலரான இளமை துள்ளிய டைரக்டருக்கு போன் போட்டார் நடிகை.”என்னவோ… ஏதோ…’ என பதறியடித்துக் கொண்டு வந்த டைரக்டரிடம் “ஸ்ரீ வேகமாக மோதியதால் பெயினா இருக்கு’ என சின்னப் பிள்ளை மாதிரி சிணுங்க… நடிகையை சமா தானப்படுத்தினார் இளமை துள்ளிய டைரக்டர். அந்த அளவுக்கு இருவருமே பாசக்கார பயலும், பொண்ணுமாத்தான் இருந்தாக.
“காதல் கொண்ட’ படத்தில்தான் முதன் முதலில் “சோ’ நடிகையும், இளமை துள்ளிய ராகவ டைரக்டரும் இணைந்து பணியாற்றினார்கள். அப்போது இவர்களுக்குள் காதல் ரசாயன மாற்றம் எதுவும் நிகழவில்லை.அதன்பின் “வானவில் குடியிருப்பு’ படத்தில் மீண்டும் சேர்ந்து பணியாற்றிய போதுதான் இவர்களுக்குள் ஒரு அண்டர்ஸ்டேண்டிங்.
“வானவில் காலனி’ படப் பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த போது… திடீரென டைரக்டருக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது. ஹோட்டல் ரூமிலேயே முடங்கிவிட்டார். அப்போது ஷூட்டிங் கேன்ஸனாது. ஆனால் நடிகையோ, “ஷூட்டிங் இல்லையே’ என கிளம்பிவிடவில்லை. டைரக்டருடன் தங்கி ஒரு நர்சு போல எல்லா உதவிகளையும் செய்தார்.காதலுக்கு நெருக்கமான, அதேசமயம் காதல் என்று தீர்மானிக்க முடியாத இந்த ஈர்ப்பில் சின்னதாக ஒரு இடைவெளி ஏற்பட்டிருந்த சமயம்…
“டெம்ப்பிள்’ படத்தில் விரல் வித்தை நடிகருடன் நடிக்கப் போயிருந்தார் நடிகை. யாரையும் எளிதில் வசப்படுத்திவிடும் வம்பு, இந்த நடிகையையும் வசப்படுத்துவதற்கான வேலைகளில் இறங்கினார். ஹீரோவின் கவனம் இப்படி நடிகை மீது சிதறியதால் “ஹ’ டைரக்டருக்கு ஹீரோ மீது செம கடுப்பு. இருந்தாலும் ஹீரோவை திட்ட முடியாமல் பொருமியபடி இருந்தார் “ஹ’.”டெம்ப்பிள்’ படத்தில் நடிகை சம்பந்த மான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட அன்றைய ராத்திரியில் நடிகையை வசியப்படுத்திவிட்டார் வம்பு. அந்த வசியத்தில் நடிகைக்கும் புதிய கிறக்கம் ஏற்பட்டுவிட்டது.
“நாளைக்கு நாம டிஸ்கஷன் பண்ணணும்’ என வம்பு சொல்ல… தலையாட்டிவிட்டார் நடிகை.மறுநாள் பரபரப்பாக படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தார் “ஹ’. ஸ்பாட்டுக்கு நடிகை வந்தார். வம்பு முகத்தில் வெளிச்சம். “ஹ’ முகத்தில் கடுப்பின் சிவப்பு.”காலையிலேயே ஊருக்கு கிளம்பியிருக்க வேண்டியவ…. எதுக்கு இப்ப இங்க வரணும்?’ என “ஹ’  கோபத்தில் கத்த…எல்லார் முன்னாலயும் கெட்ட வார்த்தையால் தன்னை “ஹ’ திட்டியதால் அவமானத்தில் அழுதபடி… ஊருக்குக் கிளம்பினார் நடிகை. வம்புவோ, ஒன்றும் தெரியாதவர் போல இருந்துவிட்டார்.
இப்படி பல கசப்பான அனுபவங்களைக் கடந்து மீண்டும் இளமை துள்ளிய டைரக்டரிடம் வந்து சேர்ந்தார். இப்போது… இவர்களின் காதல் கன்ஃபார்ம் ஆனது.இவர்களின் காதல் விஷயம் இண்டஸ்ட்ரியில் பரவியதால் மற்ற ஹீரோக்களின், டைரக்டர்களின் தொல்லை ஏற்படவில்லை. இந்தக் காதல் நடிகைக்கு மிகப்பெரிய பாதுகாப்பு  வளையமாக அமைந்தது.”நான் உன்னை விட்டு விலகிட்டா என்ன பண்ணுவ?’ என ஒரு மந்தகாச வேளையில் விளையாட் டுக்காகக் கேட்டார் டைரக்டர்.பாத்ரூமிற்குள் போய்விட்டு வந்த நடிகை பிளேடால் தன் கைகளை கீறிக்கொண்டு ரத்தம் வழிய நின்றார்.பதறிப்போனார் டைரக்டர்.  இவ்வளவு அஃபெக்ஷனாக இருந்தாலும்கூட “பாடல் கம்போஸிங்கிற்கு’ எனச் சொல்லிவிட்டு இளைஞன் என்பதை பெயராகக் கொண்ட இசையமைப் பாளருடன் பாங்காக்கிற்கு அடிக்கடி பறந்தார் டைரக்டர். அங்கே பல நாட்டு குஜிலிகளுடன் பல்லாங்குழி ஆடிவிட்டு வந்தார்.
இப்படி அடிக்கடி இன்பச் சுற்றுலா நடத்தியதால் எரிச்சலாகி டைரக்டருடன் சண்டை போட்டார் நடிகை.காதலில் ஏற்பட்ட இந்த கனமான ஊடலால்… பூங்கா ஓட்டலில் ஃபுல் அடிக்க ஆரம்பித்தார் நடிகை.அதன்பின் இவர்களின் காதலில் ஊடலும், கூடலும் இரவும் பகலும் போல “சகஜமப்பா’வானது.அன்பு வச்சாலும் மூர்க்கத்தனம், கோபம் கொண்டாலும் மூர்க்கத்தனமாக போய்க்கொண்டிருந்த இவர்களின் முரட்டுக் காதல் கல்யாணத்திலும் முடிந்தது. ஆனால்…  அந்த பந் தம் நீடிக்க வில்லை. இருவருக்கும் இடை யே வில்லியாக வந்தார் அந்த நடிகை.டைரக்டரும் “ட்ரியா’ நடிகையும் கசமுசா பண்ணுவதாக செய்திகள் வந்தபோது “சோ’ நம்பவில்லை.ஆனால்… “கையும் கலவியுமாக’ மலேசியாவில் இருவரையும் பார்த்து விட்டார் “சோ.’அப்புறம்…?
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.

கலை நிகழ்ச்சி ஒன்றிற்காக சினிமா பிரபலங்கள் மலேசியா சென்றிருந்தனர்.அங்கே… ஹோட்டல் அறையில் “இளமை துள்ளிய’ ராகவ டைரக்டரும், “ட்ரியா’ நடிகையும் காமக்கடலில் தங்கள் கவர்ச்சிக் கப்பலை செலுத்திக் கொண்டிருந்தார்கள்.
தற்செயலாக அறைக்குள் நுழைந்த… சோ… சூறாவளியாய் உருமாறினார். கையும் கலவியுமாய் பிடிபட்டவர்கள், திகைத்துப்போய் நிற்க… ஆவேசமாகப் பாய்ந்த சோ, ட்ரியாவை இழுத் துப் போட்டு அடி பின்னியெடுத்துவிட்டு கணவரான டைரக் டரை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினார்.
சென்னை திரும்பிய பிறகும்கூட… அந்த சம்பவத்தின் சூடு தணியவில்லை.
“சோ’வையும், டைரக்டரையும் சமா தானப்படுத்த நடந்த முயற்சிகள் எடுபட வில்லை.
“இவர்களுக்குள் பிரிவு வந்துவிடக் கூடாது’ என சமாதான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியவர் நட்பு நடிகைதான். நட்பின் இந்த அக்கறைக்கு முக்கிய கார ணம் இருக் கிறது.
நட்பும் ஸ்ரீ நடிகரும் தீவிர மாக காத லித்தவர்கள். இவர்கள் இரு வருக்குமிடை யே மனஸ் தாபம் ஏற்பட்டு பிரிந்தபோது ஸ்ரீயிடம் “அந்தப் பெண் மிக நல்லவள்’ என ரெகமண்ட் செய்து காதல் தொடர முயற்சித்தவர் சோ.
அந்த முயற்சி பலிக்காவிட்டாலும் கூட முயற்சி எடுத்ததற்காக “சோ’ மீது நட்புக்கு பிரியம். அதனால்தான் இப்போது “சோ’வின் பிரச்சினையை சரிசெய்ய நட்பு முயற்சி மேற் கொண்டார். ஆனால் இவர்கள் பிரிவை யாராலும் தடுக்க முடியவில்லை.
சமாதானமாகப் போவது என்றால் அதற்கு முன் சண்டை போடலாம். பிரிய முடிவெடுத்த பிறகு எதற்கு பிரச்சினை? அதனால் பிரச்சினைகள் எதுவுமில்லாமல் சட்டரீதியாக பிரிந்துவிட முடிவுசெய்து… அதன்படியே “யாரோ? எவரோ?’வாகப் பிரிந்தார்கள்.
கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் பெற்றுவிட்ட நடிகை இப்போது டைரக்டரை டென்ஷனாக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார்.
கிறக்கமூட்டும் இறுக்க ஆடைகளுடன் விழாக்களுக்கு கவர்ச்சியாக வருவது, டைரக்டரின் மாஜி நண்பர்களிடம் நட்பு பாராட்டுவது… என மாறிப்போன நடிகை ஹைதராபாத்தில் “படையம்மா’ தன் வீட்டில் நடத்தும் விசேஷ பார்ட்டிகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தார்.
இதனால் மதுப்பழக்கத்துடன், போதைப் பாக்கு, சிகரெட் பழக்கங்களும் நடிகையை தொற்றிக்கொண்டுவிட்டது.
சில மாதங்களுக்கு முன் விசாகப்பட்டினத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட்டில் கலந்துகொண்ட நடிகை… அன்றிரவு நடந்த காக்டெயிலில் கலந்துகொண்டு “கலந்து’ எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும்விதமாக டான்ஸ் போட்டு அலப்பரை கொடுத்தார்.
“படு அமைதியாக எப்போதும் மெல்லிய சோகம் படர்ந்தது போல் மோனாலிஸா புன்னகை போல் புரிய முடியாத புன்ன கையோடு வலம் வரும் அவரா இப்படி?’ என அவரின் ஆட்டம் பார்த்த சக நட்சத்திரங்கள் வியந்துபோனார்கள்.
இந்நிலையில்… பிரபல ஹீரோ ஒருவருடன் நெருக்கமாக இருக்கிறார் சோ. ஹீரோயின்களை வசப்படுத்துவதில் இந்த ஹீரோ ரொம்பவே கை தேர்ந்தவர்.
சில வருடங்களுக்கு முன்… ஃபிஷ் நடிகை பிரபலமாக இருந்தார். அவரின் கொஞ்சல் பேச்சில் கிறங்கிய இந்த ஹீரோ, ஒரு படத்தில் ஃபிஷ்ஷை தனக்கு ஜோடியாக்கினார். ஃபிஷ்ஷிடம் தன் வித்தையைக் காட்டி மடக்கிப் போட்டார்.
“மடக்கிப் போடுறது’ன்னா சாதா மடக்கு இல்ல… ஸ்பெஷல் மடக்கு. ஏற்கனவே கல்யாணமான அந்த ஹீரோ… ஃபிஷ்ஷிடம் ஒரு பெர்ஸனல் ஒப்பந்தமும் போட்டார். கிட்டத்தட்ட தன் ரகசிய மனைவி போல் வைத்துக்கொண்டு ஃபிஷ்ஷை ஃபிரை  பண்ணியவர்.
ஒப்பந்தப்படி ஹீரோவுடன் இருக்க வேண்டிய நாளில் வேறு வேலை இருந்ததால் போக முடியவில்லை ஃபிஷ்ஷால். இதையடுத்து இருவருக்கும் இடை யே பிரிவு ஏற்பட்டது. கமுக்கமாக சேர்ந்து வாழ்ந்தது போல கமுக்க மாகவே பிரிந்தார்கள்.
அதன் பிறகு அவ்வப்போது சில நடிகைகளுடன் டச்-அப் லவ்வராய் டச்சிங் டச்சிங் பண்ணி யவர் “சோ’வையும் ஒரு படத்தில் ஜோடியாக்கினார். ஆனால் அப்போது “சோவும்’ இளமை துள்ளும் டைரக்டரும் “கிக்’காகிக் கிடந்ததால் அந்த லக் இந்த ஹீரோ வுக்கு அமையவில்லை. ஆனால் “சோ’வின் டைரக்டருடன் நட்பு ஏற்பட்டதால் அவ்வப்போது நட்பு ரீதியான சந்திப்புகள் மட்டுமே நடந்தது.
இந்தச் சமயம் விசாகப் பட்டினம் ஸ்டார் கிரிக்கெட்டில் கலந்துகொண்ட இருவரும் தற் செயலாக சந்தித்தனர்.
டைரக்டரிடமிருந்து பிரிந்து தனி ஆளாய் “சோ’ நிற்க… சோர்ந்து நிற்க… “சோ’வுக்கு திடம் சொல்லு வது போல நெருங்கினார்            ஹீரோ.
இப்போது ஃப்ரெண்ட்ஷிப் பையும் தாண்டி பிரவாகம் எடுத்திருக்கிறது இவர்கள் பழக்கம்.
“அடிக்கடி மீட்டிங்… ஆசைப் பட்டா டேட்டிங்…’ என அந்த ஹீரோவின் ஆளாகவே ஆகிவிட் டார் நடிகை.
கன்னடத்தில் பெரிய ஹீரோவாக இருப்பவர்… ராம்கோபால் வர்மாவின் இந்தி-தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர்….இவரோடுதான் “சோ’ நடிகை நெருக்கம் காட்டி வருகிறார்.
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.